அர்சிம்ரத் கவுர் பாதல்
இந்திய அரசியல்வாதி
அர்சிம்ரத் கவுர் பாதல் (Harsimrat Kaur Badal) என்பவர் பதினாறாவது மக்களவை காலத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.[1]. இவரது வயது 47. இவர் டில்லியைச் சேர்ந்தவர். இவர் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் மனைவி. இந்த தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு, காங்., வேட்பாளர் ரனிந்தர் சிங்கை விட , 1,20,960 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது சகோதரர் அகாலி தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எம்.ஏ ஆனவர். 2020 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மூன்று மசோதாவினை எதிர்த்து செப்டம்பர் 17 அன்று இவர் அமைச்சரவையில் இருந்து விலகினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
- ↑ PTI (18 September 2020). "Harsimrat Kaur Badal quits Modi govt to protest farm bills - Times of India" (in en). The Times of India. https://m.timesofindia.com/india/harsimrat-kaur-badal-will-quit-modi-govt-to-protest-farm-bills-sad-chief/amp_articleshow/78170723.cms. பார்த்த நாள்: 17 September 2020.