அர்ச்சனா (நெல்)

அர்ச்சனா (Archana) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 125 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 8 (IR-8), மற்றும் தடுகன் (Tadukan) எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்ட சன்னமாக காணப்படுகிறது. புகையான் (brown planthopper (BPH) பொன்ற நோய்களை எதிர்த்து வளரும் திறனுடைய இந்த நெற்பயிர், 95 - 100 சென்டிமீட்டர் (95-100 cm) அரைக் குள்ளப் பயிராகும். ஒரு எக்டேருக்கு சுமார் 3700 - 4800 கிலோ (37-48 Q/ha) மகசூல் தரவல்ல இது, பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

அர்ச்சனா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 8 x தடுகன்
வகை
புதிய நெல் வகை
காலம்
120 நாட்கள்
மகசூல்
3700 - 4800 கிலோ எக்டேர்
வெளியீடு
1978
மாநிலம்
பிகார்
நாடு
 இந்தியா

சான்றுகள்

தொகு
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - 42. Archana". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_(நெல்)&oldid=3778572" இலிருந்து மீள்விக்கப்பட்டது