அர்ஜினூசி
பாரம்பரியக் காலத்தில், அர்ஜினூசே (Arginusae, பண்டைக் கிரேக்கம்: Ἀργινοῦσαι Arginousai ) என்று அறியப்பட்டது நவீன துருக்கியின் கடலோரம் உள்ள டிகிலி தீபகற்பத்தில் உள்ள மூன்று தீவுகளைக் குறிப்பதாகும். இது பெலோபொன்னேசியன் போரின் போது அர்ஜினூசே சமரின் தளமாக அறியப்படுகிறது. இதில் உள்ள பெரிய தீவில் கேனே நகரம் உருவான பிறகு இவை கூட்டாக கனேயா என்றும் குறிப்பிடப்பட்டன. தற்போது இரண்டு தீவுகளே எஞ்சியுள்ளன. அதே சமயம் மூன்றாவது மற்றும் பெரிய தீவானது நவீன சிற்றூரான படேம்லிக்கு அருகில் பிரதான நிலப்பகுதியுடன் இணைந்துபோயுள்ளது. [1] [2] [3] [4]
- பாஸ்டன் தீவுகள்
- கரிப் தீவு ( துருக்கியம்: Garip Adası , உண்மையில் "விசித்திர தீவு"); நிசிடா அசானோ
- கலேம் தீவு ( துருக்கியம்: Kalem Adası , உண்மையில் "பென் தீவு"); நிகோலோ, வ்ராச்சோஸ் நிகோலோஸ்
- கேன் தீபகற்பம் அல்லது பிரோமண்டரி ( துருக்கியம்: Kane Yarımada ), அர்ஜினூசி ( பண்டைக் கிரேக்கம்: Ἀργέννουσα ; இலத்தீன்: Arginusa ) பழங்காலத்தில், அது ஒரு தீவாக இருந்தபோது; கேனேயா, கேனே, Κάνη
அர்ஜினூசி பழங்கால நகரமான கேனேயின் தளமாகும் .
அர்ஜினூசி (Arginusae and Argennusa) என்ற பெயரானது பண்டைய கிரேக்க arginóeis, argennóeis (ἀργινόεις, ἀργεννόεις) சொல்லான, "பிரகாசமான-பிரகாசம்" என்பதிலிருந்து வந்தவை. [5] [6]
குறிப்புகள்
தொகு- ↑ Hamel, Debra (May 21, 2015). The Battle of Arginusae: Victory at Sea and Its Tragic Aftermath in the Final Years of the Peloponnesian War.
- ↑ Crew, Bec (November 20, 2015). "An entire ancient island has been rediscovered in the Aegean: Have we finally found the long-lost city of Kane?". Science Alert. http://www.sciencealert.com/an-entire-ancient-island-has-been-rediscovered-in-the-aegean.
- ↑ Goldhill, Olivia (November 16, 2015). "Researchers just unearthed a lost island in the Aegean". Quartz. http://qz.com/551210/researchers-just-unearthed-a-lost-island-in-the-aegean/.
- ↑ "Lost ancient island found in the Aegean". Hurriyet Daily News. http://www.hurriyetdailynews.com/lost-ancient-island-found-in-the-aegean.aspx?pageID=238&nid=91073.
- ↑ Androtion (2001). Phillip Harding (ed.). Androtion and the Atthis. Oxford: Clarendon Press. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-872149-9.
- ↑ "ἀργινόεις" in the Greek Word Study Tool