அர்ஜுன் சாண்டி
அர்ஜுன் சாண்டி (Arjun Chandy) என்பவர் டெக்சாசின் டல்லாசைச் சேர்ந்த இந்திய அமெரிக்க பாடகர், குரல் குழு பயிற்சியாளர் ஆவார். [1]
தொழில்
தொகுசாண்டி இசைக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். [1] இவரது குழந்தைப் பருவ காலங்கள் இந்திய பாரம்பரிய இசையில் மூழ்கியிருந்தன. டல்லாசில் தனது குரல் அரங்கேற்றத்தை முடித்த இவருடன், மிருதங்கத்துக்கு பூவளூர் ஸ்ரீஜியும், கடத்தில் ரமண இந்திரகுமாரும் இருந்தனர். இவர் தனது பள்ளி நாட்களில், இசையை படிக்கக கற்றுக் கொண்டார், இசைத் தத்துவத்தை படித்தார், பள்ளியின் பாடகர் குழுவில் இணைந்தார். [1] அது இவர் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புரிந்துகொள்ள உதவியது. அவருக்கு 14 வயதாக இருந்தபோது, நடுநிலைப்பள்ளியில் நால்வர் குழுவில் பாட ஆரம்பித்தார். [1]
15 வயதில், ஜாஸ் இசை உலகில் ஈடுபட்ட பிறகு, இவர் தொழில் ரீதியாக பணிபுரியத் தொடங்கினார். ஏ. ஆர். ரகுமான் இவரை 2013 ஆம் ஆண்டின் இறுதியில் சென்னைக்கு அழைத்தபோது "நாஃப்ஸ்-தி பேண்ட்" இசைக்குவில் இருந்தார். சாண்டி தற்போது அந்த இசைக்குழுவின் இயக்குநராகவும் நடத்துனராகவும் உள்ளார். அந்த இசைக்குழுவைப் பயிற்றுவிப்பதற்காக 2013 ஆம் ஆண்டு ஒரு ஆண்டு செலவிட்டார். [2] [3]
குறிப்புகள்
தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Music, a numbers game". The Hindu. 20 August 2015. http://www.thehindu.com/features/metroplus/arjun-chandy-of-vocal-group-nafs-on-his-musical-journey/article7561453.ece.
- ↑ "A. R. Rahman – The Official Site". arrahman.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ "AR Rahman's Band NAFS First Video Out | Soundbox". www.soundbox.co.in. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.