அர்த்தசாமம்

அர்த்தசாமம் என்பது நடுஇரவு என்றும், நள்ளிரவு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதுவே அர்த்த ராத்திரி என்றும் குறிப்பிடப்படுகிறது.[1]

விசுவரூப தரிசனம், காலச்சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகியவை முறையே, கோயில்களில், அதிகாலை, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு நேரங்களில் நடத்தப்படும் பூசைகளாகும்.[2] இவற்றில் நள்ளிரவுப் பூசையானது, கோயில் நடை சாத்தும் நேரத்திற்கு முன்னர் செய்விக்கப்படும் அர்த்தசாமப் பூசையாகும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அர்த்தசாமப் பூசை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.[3] திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அர்த்தசாமப் பூசையானது இரவு மணி 9:45 முதல் 10:30 வரையிலான இடைப்பட்ட நேரத்தில் செய்விக்கப்படுகிறது.[4]

References

தொகு
  1. PALS Tamil Tamil English Dictionary. Palaniappa Brothers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-530-2.
  2. Cokkaliṅkam, Vaḷḷi (1981). Tiruppattūr. Tamiḷnāṭu Aracu Tolporuḷ Āyvuttur̲ai.
  3. Maturait Tirukkōyil : Tirukkuṭa nan̲n̲īrāṭṭup peruvil̲ā malar. Aruḷmiku Mīn̲āṭci Cuntarēcuvarar Tirukkōyil. 1974.
  4. Kalyāṇacuntaram, Na (1980). Tiruccentur Murukan Koyil varalaru : History of the Tiruchendur Subrahmanyaswami Temple in Tamil Nadu and rituals for the worship of Murugan, presiding deity. Tirukkumaran Patippakam.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தசாமம்&oldid=3625952" இலிருந்து மீள்விக்கப்பட்டது