அர்ப்பணவாழ்வுச் சபைகள்
அர்ப்பணவாழ்வுச் சபைகள் (ஆங்கில மொழி: Institutes of consecrated life) என்பன கத்தோலிக்க திருச்சபையில் சட்டப்படி நிறுவப்பட்ட துறவற சபைகள் ஆகும். இவ்வகைச்சபைகளின் உறுப்பினர்கள் நற்செய்தி அறிவுரைகளான கற்பு, ஏழ்மை, கீழ்படிதலைச் சபைகளின் உரிய சட்டங்களுக்கேற்ப, வார்த்தைப்பாடுகள் அல்லது ஏனைய புனிதப் பிணைப்புகளால் வெளிப்படையாய் ஏற்றுக்கொள்கின்றனர்.[1] திருச்சபைச் சட்ட விதி எண் 573–730களில் இவ்வகை சபைகளுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வுச் சபைகள் பல வகைகளில் உள்ளன:
- உலகுசாரா சபை: இவ்வகைச்சபைகளின் உறுப்பினர்கள் உலகிலிருந்து பிரிந்து வெளிப்படையான துறவற வார்த்தைப்பாடுகள் அளித்து தங்களுக்கு உரித்தான முறையில் சகோதர வாழ்வைப் பொதுவில் வாழ்ந்து அமைப்புச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அன்பின் நிறைவை அடைய முனைகின்றனர்.[2] இவ்வகை சபைகளுக்கான வழிகாட்டுதல்கள் திருச்சபைச் சட்ட விதி எண் 607–709களில் உள்ளன.
- உலகுசார் சபை: இதில் கிறிஸ்தவ விசுவாசிகள் உலகில் வாழ்ந்து கொண்டே அன்பின் நிறைவுக்கு முயற்சி செய்கின்றனர். உலகின் புனிதப்படுத்துதலுக்கு சிறப்பாக அதன் உள்ளிருந்தவாறே உழைக்கின்றனர்.[3] உலகுசார் சபையின் ஓர் உறுப்பினரது அர்ப்பணம் அவர் பொதுநிலையினராயினும் அல்லது திருப்பணியாளராயினும் இறைமக்களது நடுவில் அவருக்குரிய திருச்சபைச் சட்டமுறையான நிலையை மாற்றுவது இல்லை.
மறைமாவட்ட ஆயர்கள், தங்கள் சொந்த ஆளுகை எல்லையில், அர்ப்பணவாழ்வுச் சபைகளை திருத்தூதரக ஆட்சிப்பீடத்தைக் கலந்தாலோசித்து நிறுவலாம்.[4] அர்ப்பணவாழ்வுச் சபைகள் மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களுக்கான பேராயம் இவ்வகைச்சபைகளை மேற்பார்வையிடும் உரோமைச்செயலகம் ஆகும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திருச்சபைச் சட்டத் தொகுப்பு எண். 573
- ↑ Code of Canon Law, canon 709
- ↑ Code of Canon Law, canon 710
- ↑ Code of Canon Law, canons 312, 609–612, 679, 715