அர்ப்பணவாழ்வுச் சபைகள்

அர்ப்பணவாழ்வுச் சபைகள் (ஆங்கில மொழி: Institutes of consecrated life) என்பன கத்தோலிக்க திருச்சபையில் சட்டப்படி நிறுவப்பட்ட துறவற சபைகள் ஆகும். இவ்வகைச்சபைகளின் உறுப்பினர்கள் நற்செய்தி அறிவுரைகளான கற்பு, ஏழ்மை, கீழ்படிதலைச் சபைகளின் உரிய சட்டங்களுக்கேற்ப, வார்த்தைப்பாடுகள் அல்லது ஏனைய புனிதப் பிணைப்புகளால் வெளிப்படையாய் ஏற்றுக்கொள்கின்றனர்.[1] திருச்சபைச் சட்ட விதி எண் 573–730களில் இவ்வகை சபைகளுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.

கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வுச் சபைகள் பல வகைகளில் உள்ளன:

  • உலகுசாரா சபை: இவ்வகைச்சபைகளின் உறுப்பினர்கள் உலகிலிருந்து பிரிந்து வெளிப்படையான துறவற வார்த்தைப்பாடுகள் அளித்து தங்களுக்கு உரித்தான முறையில் சகோதர வாழ்வைப் பொதுவில் வாழ்ந்து அமைப்புச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அன்பின் நிறைவை அடைய முனைகின்றனர்.[2] இவ்வகை சபைகளுக்கான வழிகாட்டுதல்கள் திருச்சபைச் சட்ட விதி எண் 607–709களில் உள்ளன.
  • உலகுசார் சபை: இதில் கிறிஸ்தவ விசுவாசிகள் உலகில் வாழ்ந்து கொண்டே அன்பின் நிறைவுக்கு முயற்சி செய்கின்றனர். உலகின் புனிதப்படுத்துதலுக்கு சிறப்பாக அதன் உள்ளிருந்தவாறே உழைக்கின்றனர்.[3] உலகுசார் சபையின் ஓர் உறுப்பினரது அர்ப்பணம் அவர் பொதுநிலையினராயினும் அல்லது திருப்பணியாளராயினும் இறைமக்களது நடுவில் அவருக்குரிய திருச்சபைச் சட்டமுறையான நிலையை மாற்றுவது இல்லை.

மறைமாவட்ட ஆயர்கள், தங்கள் சொந்த ஆளுகை எல்லையில், அர்ப்பணவாழ்வுச் சபைகளை திருத்தூதரக ஆட்சிப்பீடத்தைக் கலந்தாலோசித்து நிறுவலாம்.[4] அர்ப்பணவாழ்வுச் சபைகள் மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களுக்கான பேராயம் இவ்வகைச்சபைகளை மேற்பார்வையிடும் உரோமைச்செயலகம் ஆகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருச்சபைச் சட்டத் தொகுப்பு எண். 573
  2. Code of Canon Law, canon 709
  3. Code of Canon Law, canon 710
  4. Code of Canon Law, canons 312, 609–612, 679, 715
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ப்பணவாழ்வுச்_சபைகள்&oldid=2162966" இலிருந்து மீள்விக்கப்பட்டது