அறம் (சிறுகதைத் தொகுதி)

(அறம் சிறுகதைத்தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அறம் (ஒலிப்பு) என்ற மையப்புள்ளியைச் சுற்றி ஜெயமோகன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுதி அறம் என்ற சிறுகதைத் தொகுப்பாகும்.[1] இதை வம்சி பதிப்பகம், திருவண்ணாமலை 2011 ஆகஸ்டில் வெளியிட்டிருக்கிறது. உண்மை மனிதர்களின் கதைகள் என்று இக்கதைகள் ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இந்நூலின் ISBN – 978-93-80545-42-4.

அறம்-சிறுகதைத் தொகுதி-நூலட்டை

இலக்கிய முக்கியத்துவம்

தொகு

ஜெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும் வாசக வரவேற்பைப் பெற்றன. தொடர்ச்சியாக இணையதளத்திலேயே இவ்வளவு சிறுகதைகள் வெளியாகியது தமிழிலக்கியச் சூழலில் முக்கியத்துவம் உடைய முன்னோடி நிகழ்வாகும்.

இக்கதைகள் பின்னர் நூலாக வெளிவந்தபோதும் பாராட்டுக்களைப் பெற்றது. இதில் உள்ள யானைடாக்டர், நூறு நாற்காலிகள் ஆகியவை தனிநூல்களாக வெளிவந்துள்ளன. யானை டாக்டர் இலவசப் பிரதியாகவும் வினியோகம் செய்யப்பட்டது.

தன் ஐம்பது வயதை ஒட்டி அறவிழுமியங்கள் மீது உருவான ஆழமான அவநம்பிக்கையை வெல்லவே இக்கதைகளை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதைகளில் உள்ள நாயகர்கள் உண்மையான மனிதர்கள். அவர்களின் அறத்தில் ஊன்றிய பெருவாழ்க்கையைச் சொல்வதன் வழியாக தன் நம்பிக்கையை மீட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்.

கதைகள்

தொகு

அறம் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் உள்ளன.

  1. அறம்
  2. சோற்றுக்கணக்கு
  3. மத்துறு தயிர்
  4. வணங்கான்
  5. மயில்கழுத்து
  6. யானைடாக்டர்
  7. நூறுநாற்காலிகள்
  8. தாயார்பாதம்
  9. பெருவலி
  10. ஓலைச்சிலுவை
  11. கோட்டி
  12. உலகம் யாவையும்

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்ச்செல்வன், சக்தி. "`நான் எவ்வாறு நினைவுகூரப் பட விரும்புகிறேன் என்றால்' ஜெயமோகன்! பிறந்த நாள் சிறப்புப் பதிவு". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
  2. "ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை". திண்ணை. https://puthu.thinnai.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0/. பார்த்த நாள்: 10 July 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறம்_(சிறுகதைத்_தொகுதி)&oldid=3683377" இலிருந்து மீள்விக்கப்பட்டது