அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானம் (cognitive neuroscience) என்பது அறிவாற்றல் உளவியலின் ஒரு பிரிவு. இது மன செயல்பாட்டின்போது மூளையின் அமைப்பையும் செயல்களையும் விவரிக்கிறது. அறிவாற்றல் உளவியல் என்னும் அறிவியலில் உயிரினங்களின் அறிவாற்றல் திறன்களான தகவல் சேமிப்பு, படைப்பாற்றல், மொழி உற்பத்தி, மக்களையும் பொருட்களையும் அடையாளம் காணுதல், பகுத்தறிதல், தீர்வு காணுதல் போன்ற செயல்களுக்கு எவ்வாறு மூளை மன செயல்முறைகள் பொறுப்பாகின்றன என்பதை அறியலாம். காயம்பட்ட மூளையிலும் நரம்புகளிலும் ஏற்படும் செயல்பாட்டை வைத்து, இயல்பான மனநிலை செயல்பாடுகளை ஊகிக்கலாம். மூளை காயமடைந்த நோயாளிகளை ஆய்வு செய்வதன் மூலமும் அவர்களின் குறையுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் சான்றுகள் கிடைக்கும்.
வெவ்வேறு மூளைப் பகுதியில் காயமடைந்த இரு நோயாளிகள் வெவ்வேறு குறையுடைய செயல்களை வெளிப்படுத்துவர். முதல் நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது கடினமாயிருந்தால் இரண்டாவது நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது எளிதாயிருக்கும். ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாயிருந்து. முதல் நோயாளியோ பேசுவதை எளிதாகப் புரிந்து கொண்டார். இதிலிருந்து விஞ்ஞானிகள் மூளையில் பேச்சைப் புரிந்து கொள்ள தனிப்பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலைக்குச் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது அறிவாற்றல் நரம்பு உளவியலை அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானத்திலிருந்து வேறுபடுத்தியது. ஆனால் குறிப்பாகப் புலனுணர்வு நிகழ்வுகள் அடிப்படையில் நரம்பியல் வழிமுறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது.