அறிவியல் குறியீடு
அறிவியல் குறியீடு (இலங்கை வழக்கு: விஞ்ஞானமுறைக் குறிப்பீடு, Scientific Notation) என்பது சாதாரண தசமக் குறிப்பீட்டு முறையில் எழுதமுடியாத மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய எண்களை எழுதப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். அறிவியல் குறியீடு பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் கணிப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் கணிதவியலாளர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
அறிவியல் குறியீட்டில் எல்லா இலக்கங்களும் பின்வரும் வடிவில் எழுதப்படும்.
(பத்தின் bயாம் அடுக்கின் a மடங்கு),இங்கு அடுக்கு b ஒரு முழுவெண்ணும், குணகம் a யாதுமொரு மெய்யெண்ணுமாகும்.
சாதாரண தசமக் குறிப்பீடு | அறிவியற்க் குறிப்பீடு |
---|---|
2 | 2×100 |
300 | 3×102 |
4,321.768 | 4.321768×103 |
-53,000 | −5.3×104 |
6,720,000,000 | 6.72×109 |
0.2 | 2×10−1 |
0.000 000 007 51 | 7.51×10−9 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Caliò, Franca; Alessandro, Lazzari (September 2017). Elements of Mathematics with Numerical Applications. Società Editrice Esculapio. pp. 30–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-89385052-0.
- ↑ Edwards, John (2009). Submission Guidelines for Authors: HPS 2010 Midyear Proceedings (PDF). McLean, Virginia: Health Physics Society. p. 5. Archived (PDF) from the original on 2013-05-15. பார்க்கப்பட்ட நாள் 2013-03-30.
- ↑ Backus, John Warner; Herrick, Harlan L.; Nelson, Robert A.; Ziller, Irving (1954-11-10). Backus, John Warner (ed.). Specifications for: The IBM Mathematical FORmula TRANSlating System, FORTRAN (PDF) (Preliminary report). New York, USA: Programming Research Group, Applied Science Division, International Business Machines Corporation. Archived (PDF) from the original on 2022-03-29. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04. (29 pages)