அறிவியல் பூங்கா (திருநெல்வேலி)

அறிவியல் பூங்கா (திருநெல்வேலி) இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேசிய சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும் வேய்ந்தான்குளம் பேருந்துநிலையத்தின் முன்பு மூன்று ஏக்கர் பரப்பளவில் 10 கோடி மதிப்பீட்டினில் கட்டப்பட்டது.[1] இது மாணவர்கள், இளைஞர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆரவத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது.

அறிவியல் பூங்கா (திருநெல்வேலி)
கலைக்கப்பட்டது2021
அமைவிடம்வேய்ந்தான்குளம், திருநெல்வேலி.

அம்சங்கள்

தொகு
  • பூங்காவின் நுழைவாயிலில் அப்துல்கலாமின் முழு உருவச்சிலை உள்ளது.
  • இயந்திரவியல் மையம்
  • புத்தாக்க மையம்
  • திறந்தவெளி பூங்கா - சர்.சி.வி.ராமன் உருவச்சிலை, டைனோசர் உருவங்கள், இஸ்ரோவின் 2 ராக்கெட் மாதிரிகள், இயற்பியல் விதிகள் தொடர்பான மாதிரிகள், பூங்காவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் வரை பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலை கடந்து செல்லும் வண்ணம் பிவிசி, துணி போன்றவற்றினால் ஆன நடைபாதை மும்பைக்கு அடுத்து இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
  • உள்ளரங்கத்தில் செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பியுள்ள 2 ரோவர்களின் மாதிரிகள், டிரோன்களின் செயற்பாடுகள் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிர்வாகம்

தொகு
  • இந்த அறிவியல் பூங்காவின் நிர்வாகம் உள்ளூர் நிர்வாகமான திருநெல்வேலி மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • நுழைவுக்கட்டணம் உண்டு.

மேற்கோள்கள்

தொகு