அறிவுசார் சொத்துரிமைக்கான வளங்களையும் அமைப்பையும் முன்னுரிமைப்படுத்தும் சட்டம்

அறிவுசார் சொத்துரிமைக்கான வளங்களையும் அமைப்பையும் முன்னுரிமைப்படுத்தும் சட்டம் 2008 (Prioritizing Resources and Organization for Intellectual Property Act of 2008,PRO-IP Act of 2008, கீழவை சட்டவரைவு 4279)[1], வர்த்தகக்குறி, காப்புரிமைப் பட்டயம் மற்றும் பதிப்புரிமை மீறல்களுக்கான குடிசார் மற்றும் குற்றவியல் தண்டனை மற்றும் இழப்பீடுகளை கூடுதலாக்கும் அமெரிக்க சட்டமாகும். இந்தச் சட்டத்தின் விளைவாக ஐக்கிய அமெரிக்க அறிவுசார் சொத்துரிமை சார்பீடர் அலுவலகம் (USIPER) என்ற புதிய அரசு அலுவலகம் உருவாக்கப்பட்டது.[2]

இந்தச் சட்டம் உள்துறை அதிகாரிகள் காப்புரிமை உள்ளோர் சார்பாக குடிசார் வழக்குகள் பதிய வழிவகுக்கிறது.

மேற்கோள்கள் தொகு