அறுவைசிகிச்சை மகப்பேறு
அறுவைசிகிச்சை மகப்பேறு என்பது அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிக்கும் ஒரு மருத்துவ முறை ஆகும்.[2] பொதுவாக ஒரு அறுவைசிகிச்சை பிரசவம் தாய் மற்றும் சேயின் உடல் நிலை சரியாக இல்லாத போதோ அல்லது சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லாத போதோ இம்முறை தேர்வு செய்யப்படுகிறது.[2] தாய்க்கு வலிமிகு மகப்பேறு, இரட்டையர், உயர் இரத்த அழுத்தம், குழந்தை திரும்பி இருத்தல், தொப்புள்கொடி மற்றும் சூல்வித்தகம் குறைபாடு முதலிய மருத்துவ காரணங்களால் இம்முறை மக்கட்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது.[2][3] அறுவைசிகிச்சை பிரசவ முறை தாயின் இடுப்பு பகுதியின் வடிவம் மற்றும் மருத்துவ காரணிகளால் இதன் வகையை தேர்வு செய்வர்.[2][3] அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின் அடுத்த பிரசவம் சுகபிரசவமாக அமைய வாய்ப்புகள் இருக்கலாம்.[2] உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துவது என்னவென்றால் சரியான மருத்துவ காரணங்கள் இருந்தால் மட்டுமே இந்த அறுவைசிகிச்சை பிரசவ முறையை மேற்கொள்ளவேண்டம் என்பதாகும்.[3][4] ஆயினும் தாயின் வேண்டுகோளின் படி எந்த ஒரு மருத்துவ காரணங்கள் இல்லாத போதும் வலுமிகு பிரசவத்தை தவிர்க்க இந்த அறுவைசிகிச்சை பிரசவ முறை மேற்கொள்ளப்படுகிறது.[2]
அறுவைசிகிச்சை மகப்பேறு | |
---|---|
ஒரு மருத்துவ குழு அறுவைசிகிச்சை பிரசவத்தில் ஈடுபடும்போது [1] | |
ICD-10-PCS | 10D00Z0 |
ICD-9-CM | 74 |
MeSH | D002585 |
மெட்லைன்பிளஸ் | 002911 |
பொதுவாக இந்த அறுவைசிகிச்சை பிரசவ முறை 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்கும்.[2] இது தண்டுவட அல்லது பொது மயக்கவியல் மருந்துகளின் உதவியால் நடைபெறுகிறது.[2] சிறுநீர் வெளியேற்றும் குழாய் மூலம் சிறுநீர்ப்பை காலியக்கப்படுகிறது மேலும் அடி வயிற்றின் தோல்கள் கிருமி தொற்று தடுப்பான் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.[2] ஆறு அங்குல அளவிற்கு தாயின் அடிவயிற்றில் அறுவைசிகிச்சை செய்யப்படும்.[2] கருப்பையை அதே போல அறுவைசிகிச்சை மூலம் திறந்து குழந்தையை வெளியில் எடுத்து பிரசவிக்கின்றனர்.[2] பின் அறுவைசிகிச்சை மேற்கொண்ட கருப்பை பகுதிகள் மற்றும் அடிவயிற்று பகுதிகள் தையலிடப்படுகிறது.[2] அறுவைசிகிச்சை அரங்கில் இருந்து வெளியே வந்து தாய் தன் மயக்க நிலை மீண்டவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.[5] பொதுவாக தாய் உடல் நிலை தேறி மருத்துவமனையிருந்து வீட்டிற்கு செல்ல பல நாட்கள் ஆகலாம்.[2]
அறுவைசிகிச்சை பிரசவம் சிறு மருத்துவ காரணங்களில் செய்ய அவசியம் இல்லை. ஏன் என்றால் அறுவை சிகிச்சை என்பது பல பக்கவிளைவுகளை கொண்டது.[3] சுகபிரசவத்தை விட அதிக நாட்கள் தாய் குணமடைய தேவைப்படுகிறது சுமார் ஆறு வாரம் ஆகலாம்.[2] குழந்தைக்கு சுவாசக்கோளாறும் தாய்க்கு அதிகப்படியான பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.[3] விரிவான மேற்கோளின் படி 39 வார கருக்காலம் முன்னதாக அறுவைசிகிச்சை பிரசவ முறை மேற்கொள்ளக்கூடாது.[6] இந்த பிரதவ முறையால் இனப்பெருக்க மண்டலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.[7]
உலகளவில் 2012 ஆம் ஆண்டு சுமார் 23 மில்லியன் நபருக்கு அறுவைசிகிச்சை பிரசவம் நடைபெற்றது.[8] சர்வதேச ஆரோக்கிய முகமை பெண்களில் 10% முதல் 15% வரை இந்த பிரசவ முறைக்கு உகந்தவர்களாக உள்ளனர் என கருதுகிறது.[4] சில சான்றுகள் 19% என்ற உயர்ந்த அளவு பெண்கள் இந்த பிரசவ முறையில் நல்ல ஆரோக்கியம் அடைந்துள்ளனர் என கூறுகிறது.[8] உலக நாடுகளில் 45 நாடுகளுக்கு மேல் இந்த பிரசவ முறை 7.5% அளவுக்கும் கீல் உள்ளது. ஆனால் 50 நாடுகளுக்கு மேல் இதன் அளவு 27% அளவுக்கும் மேல் உள்ளது.[8] தாய் சேய் இருவரின் நலனில் அக்கறை கொண்டும் அறுவைசிகிச்சை பிரசவ முறையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.[8] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசவங்களில் 32% அளவு அறுவைசிகிச்சை பிரசவமுறை ஆகும்.[9] இந்த பிரசவ முறை கிருத்து பிறப்பதற்கு முன்பே 715 ஆம் ஆண்டிலேயே நடைபெற்றதாக குறிப்பு உள்ளது. இதில் குழந்தை நல்ல முறையில் பிறந்தும், தாய் இறந்தும் உள்ளார்.[10] தாயும் அறுவைசிகிச்சைக்கு பின் பிழைத்தல் என்பது 1500 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து வருகிறது.[10] 19 ஆம் நற்றாண்டிலிருந்து மயக்க மருந்து, கிருமி நாசினி மற்றும் கிருமி தொற்று தடுப்பான் வருகையால் இம்முறை பிரசவத்தில் தாய் சேய் இறப்பு தவிர்க்கப்படுகிறது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fadhley, Salim (2014). "Caesarean section photography". WikiJournal of Medicine 1 (2). doi:10.15347/wjm/2014.006.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 "Pregnancy Labor and Birth". Office on Women’s Health, U.S. Department of Health and Human Services. 1 February 2017. Archived from the original on 28 July 2017. பார்க்கப்பட்ட நாள் 15 July 2017.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Safe Prevention of the Primary Cesarean Delivery". American Congress of Obstetricians and Gynecologists and the Society for Maternal-Fetal Medicine. March 2014. Archived from the original on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
- ↑ 4.0 4.1 "WHO Statement on Caesarean Section Rates" (PDF). 2015. Archived (PDF) from the original on 1 May 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015.
- ↑ Lauwers, Judith; Swisher, Anna (2010). Counseling the Nursing Mother: A Lactation Consultant's Guide (in ஆங்கிலம்). Jones & Bartlett Publishers. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781449619480. Archived from the original on 11 September 2017.
- ↑ American Congress of Obstetricians and Gynecologists, "Five Things Physicians and Patients Should Question", Choosing Wisely: an initiative of the ABIM Foundation, American Congress of Obstetricians and Gynecologists, archived from the original on 1 செப்டெம்பர் 2013, பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2013
- ↑ Yeniel, AO; Petri, E (January 2014). "Pregnancy, childbirth, and sexual function: perceptions and facts". International Urogynecology Journal 25 (1): 5–14. doi:10.1007/s00192-013-2118-7. பப்மெட்:23812577.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Molina, G; Weiser, TG; Lipsitz, SR; Esquivel, MM; Uribe-Leitz, T; Azad, T; Shah, N; Semrau, K et al. (1 December 2015). "Relationship Between Cesarean Delivery Rate and Maternal and Neonatal Mortality". JAMA 314 (21): 2263–70. doi:10.1001/jama.2015.15553. பப்மெட்:26624825. https://archive.org/details/sim_jama_2015-12-01_314_21/page/2263.
- ↑ "Births: Provisional Data for 2017" (PDF). CDC. May 2018. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
- ↑ 10.0 10.1 10.2 Moore, Michele C.; Costa, Caroline M. de (2004). Cesarean Section: Understanding and Celebrating Your Baby's Birth (in ஆங்கிலம்). JHU Press. p. Chapter 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801881336.