அலகா கேசவ் தேசுபாண்டே

இந்திய மருத்துவர் மற்றும் சமூக சேவையாளர்

அலகா கேசவ் தேசுபாண்டே (Alaka Keshav Deshpande) இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் சமூக சேவையாளராவார். மருத்துவத்துறை தொடர்பான பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

எயிட்சு நோயாளிகளுக்காக பணியாற்றியதற்காக அலகா நன்கு அறியப்படுகிறார். மும்பையில் ஜேஜே மருத்துவமனையில் இவர் பணிபுரிந்தார். 1990 ஆம் ஆண்டு முதல் எச்ஐவி புற நோயாளிகள் பிரிவைத் தொடங்கினார். 2003-04 ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை எதிர்-ரெட்ரோவைரல் சிகிச்சைப் பிரிவை நிறுவி தலைமை வகித்தார். மருத்துவமனையில் இருந்து இந்த காலத்திற்கு அவர் எந்த சம்பளமும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் 4 வது உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Shelar, Jyoti (3 December 2011). "JJ politics pushes out city's face of HIV care". Mumbai Mirror. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகா_கேசவ்_தேசுபாண்டே&oldid=3237771" இலிருந்து மீள்விக்கப்பட்டது