அலகு (beak) என்பது பறவையின் ஒரு வெளிப்புற உறுப்பாகும். இது உணவை உண்ணவும், இரையைக் கொல்வதற்கும், சண்டையிடவும், இளம் குஞ்சுகளுக்கு உணவை அளிப்பதற்கும் பயன்படுகின்றது. பறவையின் அலகானது வடிவம், நிறம் மற்றும் அமைப்புகளில் வேறுபட்டு காணப்படும். பறவைகளின் அலகானது ஒவ்வொரு இனத்திற்கு இனம் அளவு, மற்றும் வடிவம் வேறுபட்டு காணப்படும். பொதுவாக பறவைகளின் அலகானது இரண்டு தாடைகளான மேல்தாடை மற்றும் கீழ்தாடையை உள்ளடக்கியது.

பறவைகளின் அலகுகள் ஒப்பீடு, வெவ்வேறு உண்ணும் முறைக்கு ஏற்ப வடிவமைத்த வெவ்வேறு அலகுகள். அளவீட்டிற்கல்ல.

பெயரியல் தொகு

அலகு என்னும் சொல்லானது முன்பு கொன்றுண்ணிப் பறவை வகைகளுக்கு இருந்த கூர்மையான இரையைக் கொத்தும் அலகை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது .[1] பின் நவீன பறவையியலில் இச்சொல்லானது அனைத்து பறவை வகைகளுக்கும் உள்ள உறுப்பு என்ற பொதுவான சொல்லாக மாறியது. பீக்குஸ் என்ற இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட பீக் என்ற சொல்லானது ஆங்கிலத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டது.[2]

நிறம் தொகு

பறவைகளின் அலகின் நிறமானது அதன் மெலனின் நிறமியை பொறுத்து அமைகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகு&oldid=3728108" இருந்து மீள்விக்கப்பட்டது