அலங்கு நாய்

தமிழ்நாட்டு நாயினம்

அலங்கு என்பது தமிழ்நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகும்.[1] இந்த நாய்கள் தஞ்சை, திருச்சி வட்டாரங்களைப் பூர்வீகமாகக் கொண்டவை என்றும், மிகக் குறைவான ரோமத்துடன் காணப்படுபவை. நன்கு இறங்கிய நெஞ்சும் தசைப்பற்றுடன் பெரிய உருவமுமாக தூக்கிய காதுகளுடன் இருக்கும் என விளக்கபட்டுள்ளது. இந்த நாய் இனம் தற்போது அழிந்துவிட்டது. அலங்கு நாயின் ஓவியம் தஞ்சை பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ளது. இதனை உலகப்புகழ் பெற்ற விலங்கியல் நிபுணர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகள் மூலமாக அறிந்தனர். “வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை” என டெஸ்மாண்ட் மோரிஸ் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு டாக்ஸ் - தி அல்டிமேட் டிஸ்கவரி ஆப் ஆவர் 1000 டாக் பிரீட்ஸ் எனும் நூலில் உள்ளது.

1962 க்கு முன்னர் அலங்கு நாய் இனம் குறித்து எங்கும் பதிவு செய்யப்படவே இல்லை. சோழர் காலத்து வரலாற்றை எழுதிய எந்த வரலாற்றாசிரியரும் அலங்கு என்ற நாய் இனம் இருந்ததாகவோ, அது சோழர்களால் பேணி வளர்க்கப்பட்டதாகவோ பதிவு செய்யவில்லை. ஆக, தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சித்திரம் ஒரு நாயினது படம் என்று சொல்லலாமே தவிர, சோழர்கள் வளர்த்த அலங்கு நாய் என்றோ, அப்படி ஒரு இனம் இருந்து அழிந்து போனதென்றோ உறுதியாகக் கூறுவதற்கில்லை. என்று ஆய்வாளர் இரா சிவசித்து குறிப்பிடுகிறார்.[2]

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்கு_நாய்&oldid=3684326" இலிருந்து மீள்விக்கப்பட்டது