அலாமத் லங்காபுரி

அலாமத் லங்காஃபூரி 1869ம் ஆண்டில் இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த மாதாந்த சிற்றிதழாகும்.[1][2][3]

அலாமத் லங்காபுரி 1869

முதலாவது இசுலாமிய சிற்றிதழ்

தொகு

இலங்கை இசுலாமிய இதழியல் வரலாற்றில் முதலாவது வெளிவந்த இதழாக இது இனங்காட்டப்படுகின்றது.

ஆசிரியர்

தொகு
  • சல்தீன்.

வெளியீடு

தொகு

அலாமத் லங்காபுரி எனும் இதழை கொழும்பில் ஒரு வர்த்தகராக இருந்த துவான்பாபா யூனுசு என்பவர் வெளியிட்டுள்ளார். இவர் ஒரு மலாயராவார்.

கருத்து

தொகு

அரபு மொழியில் அலாமத் என்பது அடையாளம் என்று பொருள்படும். லங்காபூரி எனும் போது அது இலங்கையனைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. எனவே அலாமத் லங்காபூரி எனும்போது இலங்கையனின் அடையாளம் எனப் பொருள்கொள்ள முடியுமாக உள்ளது.

கல்லச்சுப் பதிப்பு

தொகு

இந்த இதழ் கையெழுத்தில் எழுதப்பட்டு கல்லச்சுப் பதிப்பாக வெளிவந்துள்ளது. இதன் சில பிரதிகளை கொழும்பு சுவடிகள் கூடத்தில் இன்றும் பார்க்கக் கூடியதாகவுள்ளன.

அரபுத் தமிழ்

தொகு

இவ்விதழ் அரபுத் தமிழில் வெளிவந்தது. அரபுத் தமிழ் எனும்போது தமிழ் உச்சரிப்பில் தமிழ் எழுத்து பயன்படுத்தப்படாமல் அரபு எழுத்தைக் கொண்டு அரபியில் எழுதப்படும் எழுத்துக்கள் அரபுத் தமிழ் எனப்படும். 19ம் நூற்றாண்டில் இலங்கையில் இசுலாமியர்களால் எழுதப்பட்ட பெரும்பாலான ஆக்கங்கள் அரபுத் தமிழிலேயே அமைந்திருந்தன.

காரணம்

தொகு

19ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இசுலாமியர்கள் அரபுமொழியைக் கற்பதில் கூடுதலான ஆர்வத்தைக் காட்டிவந்துள்ளனர். இக்காலகட்டங்களில் மார்க்க அறிஞர்களும், கற்றவர்களும் மத்ரசாக்கள் எனப்படும் அரபுப் பாடசாலைகளில் கற்றவர்களாக உள்ளனர். இவர்கள் அரபு மொழியில் பெற்ற தேர்ச்சியினால் தமிழ் விடயங்கள் நேரடியாக அரபியில் எழுதியுள்ளனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலான மத்ரசாக்கள் திண்ணை மத்ரசாக்களாகவே அமைந்திருந்ததாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Hussein, Asiff. Sarandib: An Ethnological Study of the Muslims of Sri Lanka. [Nugegoda]: Asiff Hussein, 2007. p. 421
  2. Kularatne, Tilak. History of Printing and Publishing in Ceylon, 1736–1912. Dehiwala: Tilak Kularatne, 2006. p. 205
  3. Universiti Kebangsaan Malaysia. Dunia Melayu. Kuala Lumpur: Universiti Kebangsaan Malaysia, 1986. pp. 121, 129

உசாத்துணை

தொகு
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19ஆம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாமத்_லங்காபுரி&oldid=4116808" இலிருந்து மீள்விக்கப்பட்டது