அலாமோசைட்டு

இனோசிலிக்கேட்டு கனிமம்

அலாமோசைட்டு (Alamosite) என்பது Pb12Si12O36 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நிறமற்ற இச்சிலிக்கேட்டு கனிமம் அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டது. அலாமோசு, சனோரா, மெக்சிகோ நாட்டின் சொனோரா மாநிலத்தின் அலாமோசு நகரில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. ஈயம் மிகுந்த ஆக்சிசனேற்ற மண்டலங்களில் அரிய இரண்டாம்நிலை கனிமமாக அலாமோசைட்டு தோன்றுகிறது. பக்கத்திலுள்ள தகவல் பெட்டியில் கருப்பு லெட்டில்லைட்டுடன் அலாமோசைட்டு இணைதிருப்து ஓர் உதாரணமாகும் [1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் அலாமோசைட்டு கனிமத்தை Aam[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

அலாமோசைட்டு
Alamosite
ஒளிபுகும் அலாமோசைட்டு படிகங்கள் லெட்டில்லைட்டு மற்றும் மெலாநோட்கைட்டு அணிக்கோவையில்
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுPb12Si12O36
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
பிளப்பு{010} சரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை4.5
மிளிர்வுவிடாப்பிடியான பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி6.49
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.947, nβ = 1.961, nγ = 1.968
இரட்டை ஒளிவிலகல்δ = 0.021
2V கோணம்65° (அளக்கப்பட்டது.)
மேற்கோள்கள்[1][2]


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Alamosite. Webmineral. Retrieved on 2011-10-10.
  2. Alamosite Mineral Data. Mindat.org. Retrieved on 2011-10-10.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாமோசைட்டு&oldid=3937525" இலிருந்து மீள்விக்கப்பட்டது