அலார்சைட்டு

அலார்சைட்டு (Alarsite) என்பது AlAsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் அலுமினியமும் ஆர்சனேட்டும் கலந்த கனிமமாகக் கருதப்படுகிறது[1]. இக்கனிமங்களின் உட்கூறுகளை அடிப்படையாகக் கொண்டே பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. நொறுங்கக் கூடியதாகவும் நிறைவுறா படிக முகப்பும் கொண்ட மணிகளாக முக்கோணச் சீர்மையில் அலார்சைட்டு தோன்றுகிறது. 5 முதல் 5.5 என்ற மோவின் கடினத்தன்மை மதிப்பும் 3.32 என்ற ஒப்படர்த்தியும் கொண்டதாக இக்கனிமம் உள்ளது.நிறமற்றும் வெளிர் மஞ்சள் சாயலும் கொண்டு பகுதியாக ஒளி உமிழக்கூடிய பண்பைக் கொண்டுள்ளது. கண்ணாடி போன்ற பளபளப்பு கொண்ட இக்கனிமம் ஓரச்சு (+) உடன் ஒளிவிலகல் குறிப்பெண் nω = 1.596 மற்றும் nε = 1.608 அளவுகளை பெற்றுள்ளது.

அலார்சைட்டு
Alarsite
தோல்பாச்சிக்கில் கிடைத்த அலார்சைட்டு
வகைகனிமம்
இனங்காணல்
படிக அமைப்புமுக்கோனம்
மோவின் அளவுகோல் வலிமை5-5.5
மிளிர்வுபளபளக்கும் ஒளிர்வு
ஒப்படர்த்தி3.32.
ஒளிவிலகல் எண்nω = 1.596 மற்றும் nε = 1.608.

உருசியாவின் தூரக்கிழக்கு பிரதேசம், கம்சாத்கா பிரதேசம், டோல்பாச்சிக் எரிமலையில் உள்ள நீராவித் துளைகள் போன்ற இடங்களில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது[2][3].பெதோட்டோவைட்டு, கிளியுசெவ்சிகைட்டு, லாமெரைட்டு, நபோகோயிட், அட்லாசோவைட்டு, லேங்பெய்னைட்டு, ஏமடைட்டு மற்றும் டெனோரைட்டு போன்ற கனிமங்களுடன் கலந்தும் அலார்சைட்டு காணப்படுகிறது[1].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அலார்சைட்டு கனிமத்தை Ars[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. Fact sheet from Mindat.org
  3. Fact sheet from Webmineral.com
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலார்சைட்டு&oldid=4133885" இலிருந்து மீள்விக்கப்பட்டது