அலிசா ஆன் குட்மன்
அலிசா ஆன் குட்மன் (Alyssa Ann Goodman) (பிறப்பு ஜூலை 1, 1962, நியூயார்க் நகர்)[2] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் பயன்முறை வானியல் துறைசார்ந்த இராபர்ட் வீலர் வில்சன் கட்டில் பேராசிரியர் ஆவார். இவர் சுமித்சோனிய நிறுவன ஆய்வு இணையரும் ஆவார். மேலும், இவர் புத்தாக்கக் கணிப்புக்கான ஆர்வார்டு முன்முனைவின் நிறுவன இயக்குநர் ஆவார்.[3]
அலிசா ஏ. குட்மன் Alyssa A. Goodman | |
---|---|
பிறப்பு | அலிசா ஆன் குட்மன் சூலை 1, 1962 நியூயார்க் நகர், நியூயார்க் மாநிலம், அமெரிக்க ஒன்றிய நாடுகள் |
வாழிடம் | இலெக்சிங்டன், மசாசூசட் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் ஆர்வார்டு பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | உடுக்கணவெளிக் காந்தப் புலங்கள்: நோக்கீட்டுக் கண்ணோட்டம் (1989) |
ஆய்வு நெறியாளர் | இர்வின் ஐ. சாப்பிரோவ் |
Other academic advisors | சார்லசு ஆர். அல்காக்[1] |
விருதுகள் | வானியலுக்கான நியூட்டன் இலாசி பியர்சு பரிசு, 2015 இன் ஆர்வார்டு அறக்கட்டளை அறிவியலாளர் |
இணையதளம் Official website |
வாழ்க்கைப்பணி
தொகுகுட்மன் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்திலும் மசாசூசட் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் விண்மீன்களுக்கிடையில் அமைந்த அடர்வளிம ஆய்வில் ஈடுபட்டார். குறிப்பாக இவர் உடுக்கண இடைவெளி வளிமங்கள் எப்படி விண்மீன்கள் மாறுகின்றன என்பதில் கவிந்துள்ளது. குட்மன் விண்மீன்கள் உருவாகும் பகுதிகளின் மு வானளக்கைத் திட்ட முதன்மை ஆய்வாளராக உள்ளார்;[4] இத்திட்டம் பால்வெளியில் அமைந்த மூன்று பெரிய விண்மீனாக்கப் பகுதிகளை முழுமையாக வான்படம் வரைய முயல்கிறது. இவரது சொந்த ஆய்வு பெரிய, பலவகை வானளக்கைகள் குவித்து வைத்துள்ள ஏராளமான தரவுகளைபகுத்தாய்வு செய்து புதிய வழிமுறைகளில் உருவகப்படுத்தும் அல்லது காட்சிப்படுத்தும் முயற்சியில் அண்மையில் குவிந்துள்ளது.
இவர் கர்டிசு வாங்குடனும் ஜொனாதன் பே உடனும் மிக்ரோசாப்ட் உலகளாவிய தொலைநோக்கித் திட்ட்த்தில் அணுக்கமாகப் பணிபுரிந்துள்ளார்.[5] இப்பணி மைக்ரோசாப்ட் ஆய்வகத்திலும் அமெரிக்க வானியல் கழகத்திலும் திறந்த தகவை வாயிலை உருவாக்கவும் உலகளாவிய தொலைநோக்கியின் பயன்பாட்டை மேம்படுத்தவும் நடைபெறுகிறது. உலகளாவிய தொலைநோக்கி என்பது ஒரு கணினி நிர்ல் ஆகும். இந்நிரல் ஆய்வாளருக்கும் கல்வியாளருக்கு ஒரு மெய்நிகர் புடவியை ஒப்புருவாக்கம் செய்து அளிக்கிறது. இவரை 2015 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியலாளராக அர்வார்டு அறக்கட்டளை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.[6]
இவர் பல அரசுசார்ந்த, நிறுவனம் சார்ந்த தரவு தொடர்பான அறிவுரைக் குழுக்களில் பணி செய்துள்ளார். இவற்றில் தேசியக் கல்விக்கழகத்தின் ஆராய்ச்சித்தரவு,தகவல் குழுமம்,[7] தேசிய அறிவியல் அறக்கட்டளை நிதிநல்கும் பெருந்தரவுகள் அறவியல், சமூகம் மண்றம் ஆகியன அடங்கும்.[8] இவர் 2008 இல் இருந்து 2009 வரை வார ஓய்வு நாட்களில் டபுள்யூஜிபிஎச் தொலைக்காட்சி நிலைய அக அறிஞராக இருந்தார்.
கல்வி
தொகுஇவர் நியூயார்க் மாநில, நியூ ஐதே பார்க்கில் உள்ள கெரிக்சு உயர்நிலைப் பள்லியில் படித்தார். பின்னர் இவர் இயற்பியலில் தன் இளமறிவியல் பட்டத்தை1984 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பின்னர் இயற்பியலில் முனைவர் பட்டத்தை 1989 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
தகைமைகள்
தொகு- வானியலுக்கான நியூட்டன் இலாசி பரிசு, அமெரிக்க வானியல் கழகம், (1997)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alumni/ae Notes". Physics@MIT Journal (Fall 2001). 2001. http://web.mit.edu/physics/news/physicsatmit/physicsatmit_01_alumnotes.pdf.
- ↑ Goodman, Alyssa (February 2010). "Curriculum Vitae" (PDF). Harvard University. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013.
- ↑ Reid, Rosalind. "Initiative in Innovative Computing". Harvard University. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013.
- ↑ Goodman, Alyssa (19 Sep 2011). "The COordinated Molecular Probe Line Extinction Thermal Emission Survey of Star Forming Regions". Harvard University. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013.
- ↑ "A look at the editors: Alyssa Goodman". The Fourth Paradigm. Nov 8, 2010. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013.
- ↑ "Harvard Foundation to honor Goodman as Scientist of the Year". The Harvard Gazette. March 17, 2015. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
- ↑ "Board on Research Data and Information (BRDI), Alyssa Goodman". The National Academies of Sciences, Engineering, and Medicine. 2016. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
- ↑ "COUNCIL FOR BIG DATA, ETHICS, AND SOCIETY, Members". Council for Big Data, Ethics, and Society. 2016. Archived from the original on 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.