அலி அமிரி (வரலாற்றாசிரியர்)

உதுமானியப் பேரரசின் வரலாற்றாளர்

அலி அமிரி (Ali Amiri (historian)) உதுமானியப் பேரரசைச் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர் ஆவார். ஒரு நிதி அதிகாரியாக இவர் பணிபுரிந்தார். இவர் கண்டறிந்த அரபு மற்றும் துருக்கிய கல்வெட்டுகளை படியெடுக்க பல்வேறு நகரங்களுக்கு தனது பணிகளைப் பயன்படுத்தினார். உள்ளூர் வரலாறுகள், பழைய ஆவணங்கள் ஆகியவற்றை வரலாற்று மற்றும் கவிதை இரண்டிலும் தேடினார். தனது முயற்சியின் மூலம் அரிய மற்றும் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் ஒரு நூலகத்தை உருவாக்கினார். இந்த கையெழுத்துப் பிரதிகள் இசுதான்புல்லின் தேசிய நூலகத்தின் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தன.[1]

அலி அமிரி

அலி பல்வேறு வரலாற்றுச் சங்கங்களில் உறுப்பினராக இருந்தார். வரலாறு மற்றும் இலக்கிய இதழின் வெளியீட்டாளராகவும் மகமூத் கசுகாரியின் திவான் லுகாத் அல்-துர்க்கின் ஆசிரியராகவும் இருந்தார். ஓர் ஆசிரியராக அறியப்பட்டாலும், வரலாற்று மற்றும் இலக்கியப் படைப்புகளை எழுதினார். இசுதான்புல்லில் உள்ள சப்லைம் போர்ட்டின் காப்பகங்களை வகைப்படுத்துவதில் இவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Ali Amiri, R. Mantran, The Encyclopaedia of Islam, Vol. I, ed. H.A.R. Gibb, J.H. Kramers, E. Levi-Provençal and J. Schacht, (E.J. Brill, 1986), 391.
  2. Ali Amiri, R. Mantran, The Encyclopaedia of Islam, Vol. I, 391.