அலுகுறும்பர்

இந்தியப் பழங்குடிகள்

அலுகுறும்பர் என்னும் பழங்குடியினர் தமிழகப் பழங்குடிகள் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நீலகிரி மலையில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர்கள் பழைய பல்லவ மரபினை சேர்ந்தவர்களாவர். இவர்கள் கன்னடம் கலந்த கலப்பு மொழி ஒன்றைப் பேசிவருகின்றனர். இவர்கள் பெட்டகுறும்பர் எனவும், முள்ளு குறும்பர் என்றும் அழைக்கப்படுகின்றன்ர். யானைகளை பிடிப்பது இவர்களது தொழில் ஆகும். யானைகளின் எண்ணிக்கையை கணக்கிடுவோர் இவர்களை நாடிபோகின்றனர். ஏனெனில் இவர்கள் யானைகளை இனம் பிரித்து அடையாளம் காட்டுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுகுறும்பர்&oldid=4116012" இலிருந்து மீள்விக்கப்பட்டது