அலுமினியம் மணிகள்
அலுமினியம் மணிகள் (Aluminium granules) என்பவை அலுமினியத்தால் உருவாக்கப்படும் மெல்லிய கோளவடிவ திரள்களாகும்[1][2][3][4].
தயாரிப்பு
தொகுஅலுமினியத் துகள்கள் முதன்மை அல்லது இரண்டாம் தர அலுமினியத்தை உருக்கி காற்று அல்லது வெற்றிடத்தில் ஊதுவதால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அல்லது மணலில் அச்சு வார்த்து பின்னர் அதைச் சலித்தும் தயாரிக்கப்படுகின்றன. உருகிய அலுமினியத்தை தண்ணிரில் வார்ப்பிட்டும் அலுமினிய மணிகள் தயாரிக்கப்படுகின்றன.
தூளும் மணிகளும்
தொகுநுண்துகளாக்கப்பட்ட அலுமினியத்துடன் ஒப்பிடும்போது அலுமினிய மணிகள் பாதுகாப்பானதாகவும் பொருளாதாரப் பலனளிப்பவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அலுமினிய மணிகள் உற்பத்தியிலும் பயன்படுத்துவதிலும் குறைந்த அளவே வெடிப்பு ஆபத்துகள் உள்ளன.
சிறப்பு
தொகுஅலுமினியத் தூளின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் அலுமினிய மணிகளின் அடர்த்தி 1.0 முதல் 1.8 கிராம் / செ.மீ 3 வரை இருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Davies, Joseph R., ed. (1993), "Powder Metallurgy Processing", Aluminium and aluminium alloys, ASM Speciality Handbook Series (5th ed.), ASM International, pp. 275–284.
- ↑ Wissling, Peter (2006) Metallic Effect Pigments: Fundamentals and Applications. Vincentz Network GmbH & Co KG. pp. 14-15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3878701713
- ↑ Lollchund, M. R. (2009). International Conference on Advances in the Theory of Ironmaking and Steelmaking (ATIS 2009), December 09-11,2009. Allied Publishers. pp. 450-451. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8184245394
- ↑ Neikov, Oleg D.; (et al.) (2004). Handbook of Non-Ferrous Metal Powders: Technologies and Applications. Elsevier. pp. 271-272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080559409