அலுமினோசெலதோனைட்டு
அலுமினோசெலதோனைட்டு (Aluminoceladonite) என்பது K(Mg,Fe2+)Al(Si4O10)(OH)2.[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தாழ்வெப்பநிலை பொட்டாசியம் ஈரெண்முக மைக்கா கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இல்லைட்டு அலுமினோசெலதோனைடு திண்மக்கரைசல் வரிசையில் இக்கனிமம் இறுதி உறுப்பினராகும்.
அலுமினோசெலதோனைட்டு Aluminoceladonite | |
---|---|
இயுலேண்டைட்டுடன் அலுமினோசெலதோனைட்டு - நாசிக் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா (பரிமானங்கள்: 14.8 செ.மீ x 10.2 செ.மீ x 6.5 செ.மீ) | |
பொதுவானாவை | |
வகை | பைலோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | K(Mg,Fe2+)Al(Si4O10)(OH)2 |
இனங்காணல் | |
நிறம் | தூய்மையான நிலையில் நிறமற்றது, பெர்ரசு இரும்பு கலந்திருப்பின் பச்சை |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
முறிவு | மைக்கா போன்றது |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
இரட்டை ஒளிவிலகல் | 0.0190-0.0240 |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அலுமினோசெலதோனைட்டு கனிமத்தை Acel[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
தொகுஅலுமினோசெலதோனைட்டு பெரும்பாலும் ஓர் அரிய கனிமமாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் இதன் உண்மையான இருப்பானது அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் காரணமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது. அலுமினோசெலதோனைட்டு, இல்லைட்டு-அலுமினோசெலதோனைட்டு திண்மக் கரைசல் தொடரில் உள்ள மற்ற பைலோசிலிக்கேட்டு தாதுக்களுடன், முக்கியமாக நன்றாக சிதறடிக்கப்பட்ட, பெரும்பாலும் இடை-அடுக்கு-குறைபாடு, அலுமினியம் நிறைந்த பொட்டாசியம்-ஈரெண்முக மைக்கா வகைகளின் வண்டல் பாறைகளில் இக்கனிமம் காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aluminoceladonite: mineral information, data and localities". பார்க்கப்பட்ட நாள் March 18, 2019.
- ↑ "Aluminoceladonite mineral data". பார்க்கப்பட்ட நாள் March 18, 2019.
- ↑ Drits, Victor A.; Zviagina, Bella. B; McCarty, Douglas K; Salyn, Alfred L. (2010). "Factors responsible for crystal-chemical variations in the solid solutions from illite to aluminoceladonite and from glauconite to celadonite". American Mineralogist 95 (2–3): 348–361. doi:10.2138/am.2010.3300. Bibcode: 2010AmMin..95..348D.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Zviagina, Bella B.; Drits, Victor A; Środoń, Jan; McCarty, Douglas K.; Dorzhieva, Olga V. (2015). "The illite–aluminoceladonite series: distinguishing features and identification criteria from x-ray diffraction and infrared spectroscopy data". Clays and Clay Minerals 63 (5): 378–394. doi:10.1346/ccmn.2015.0630504. Bibcode: 2015CCM....63..378Z.