அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் அறக்கட்டளை

அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் அறக்கட்டளை (Alexander von Humboldt Foundation) (இடாய்ச்சு மொழி: Alexander von Humboldt-Stiftung) என்பது ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நிறுவனமாகும். இது மத்திய வெளியுறவு அலுவலகம், மத்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச பங்களிப்பின் மூலம் நிதியுதவியுடன் செயல்படுகிறது. இது ஜெர்மனியிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சிறந்த விஞ்ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இடையிலான சர்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. [1] [2]

கண்ணோட்டம்

தொகு

ஒவ்வொரு ஆண்டும், இந்த அறக்கட்டளை 700க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிதியுதவி மற்றும் விருதுகளை வழங்குகிறது. இந்த விருதில் முதன்மையாக இயற்கை அறிவியல் (கணிதம் சேர்க்கப்பட்டுள்ளது) மற்றும் மனிதநேயத்திலிருந்து கல்வியாளர்களுக்கும் வழங்குகிறது.[3] உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் ஜெர்மனிக்கு வந்து ஜெர்மனின் ஆராய்ச்சியாளருடன் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதிக்கிறது. கூடுதலாக, ஆராய்ச்சி திட்டத்தில் பணியாற்ற உலகில் எங்கும் செல்ல ஃபியோடர் லினன் நிதியுதவி ஜெர்மன் அறிஞர்களுக்கு வழங்குகிறது. மேலும் ஜெர்மனின் ஆய்வாளர் அலெக்சாண்டர் வான் கூம்போல்ட் ஆய்வாளருடன் கூட்டுறவு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, இந்த கூட்டுறவு விருதுகளில் ஹம்போல்ட் பேராசிரியர் மற்றும் சோஃபியா கோவலெவ்ஸ்காயா விருதுகள் போன்ற பல பெரிய பரிசுகளும் அடங்கும். அறக்கட்டளையின் நிதியுதவி மற்றும் விருதுகள் ஜெர்மனியில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் உயரிய ஆய்வு விருதுகளாகக் கருதப்படுகின்றது.இந்த நிதியுதவி பெற்ற மாணவர்கள் தாங்கள் ஒரு இணைப்புடன் செயல்படுவது இந்த அறக்கட்டளையின் மிகப் பெரிய பலமாகக் கருதப்படுகிறது. இதில் 130க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 26,000க்கும் மேற்பட்ட ஹம்போல்டியன்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 50 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[4] பான் ஜெர்மனியில், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 20 பல்கலைக்கழகங்கள் கல்வி சுதந்திரம் தொடர்பான மீறல்கள் குறித்த சர்ச்சையை வலியுறுத்துவதற்காக அறிஞர்களின் ஜெர்மன் பகுதியை இடர் வலையமைப்பில் (SAR) நிறுவியுள்ளன. கல்வியாளர்கள் துன்புறுத்தப்படும் நாடுகளில் ஆபத்தில் இருக்கும் அறிஞர்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்குவதாக இவர்கள் சமீபத்தில் அறிவித்தனர்.[5]

இந்த அறக்கட்டளை ஆரம்பத்தில் பேர்லினில் 1860இல் ஜெர்மன் விஞ்ஞானிகளுக்குப் பிற நாடுகளில் ஆராய்ச்சி செய்ய ஆதரவை வழங்குவதற்காக நிறுவப்பட்டது. 1923 உயர் பணவீக்கத்தின் போது, இந்த அறக்கட்டளை இதன் மூலதனத்தின் பெரும்பகுதியை இழந்தது. வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஜெர்மனியில் வந்து தங்குவதற்கு ஆதரவளிக்கும் புதிய குறிக்கோளுடன் இது 1925ஆம் ஆண்டில் ஜெர்மன் ரீச்சால் மீண்டும் நிறுவப்பட்டது. அறக்கட்டளை 1945இல் செயல்படுவதை நிறுத்தியது. இன்றைய அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் அறக்கட்டளை டிசம்பர் 10, 1953 இல் மீண்டும் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் பான்-பேட் கோடெஸ்பெர்க்கில் அமைந்துள்ளது. [6]

மேலும் காண்க

தொகு
  • அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட்
  • கூம்போல்ட் பரிசு (கூம்போல்ட் ஆராய்ச்சி விருது)
  • மேக்ஸ் பிளாங்க்-கூம்போல்ட் ஆராய்ச்சி விருது
  • சோபியா கோவலெவ்ஸ்கயா விருது
  • அலெக்சாண்டர் வான் கூம்போல்ட் விருதாளர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு

 

வெளி இணைப்புகள்

தொகு
  1. "About us". பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
  2. "Partners". பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
  3. "Statistical Trends". பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  5. "Alexander von Humboldt-Foundation - 21 - German Universities unite to provide more support for threatened researchers". www.humboldt-foundation.de. Archived from the original on 2018-02-20. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  6. "Alexander von Humboldt Foundation". Studycor. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.