அலெக்சாந்திரியா நூலகம்
அலெக்சாந்திரியா நூலகம் ( Royal Library of Alexandria அல்லது Ancient Library of Alexandria) என்பது பழங்காலத்தில் எகிப்தின், அலெக்சாந்திரியாவில் இருந்த ஒரு நூலகமாகும். இது பழங்காலத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நூலகமாக இருந்தது. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1] இது தாலமிக் வம்சத்தின் ஆதரவின் கீழ் செழித்தோங்கியது கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த நூலகமானது கி.மு 30 ஆம் நூற்றாண்டில் எகிப்தை உரோமானியர்கள் கைப்பற்றும் வரை சிறப்பாகச் செயல்பட்டது. இந்த விரிவுரைகள், கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய மையமாக இருந்தது. இந்த நூலகமானது அலெக்ஸாண்ட்ரியாவின் மியூசியம் என்றழைக்கப்படும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அங்கு பழங்காலத்தின் மிக பிரபலமான சிந்தனையாளர்கள் பலர் ஆய்வுகள் செய்தனர்.
அலெக்சாந்திரியா நூலகம் Library of Alexandria | |
---|---|
நாடு | எகிப்து |
வகை | தேசிய நூலகம் |
தொடக்கம் | கி.மு. 3 ஆம் நூற்றாண்டு |
அமைவிடம் | அலெக்சாந்திரியா |
Collection | |
அளவு | 10,00,000 |
Map | |
இந்த நூலகம் மாசிடோனியாவின் தளபதியும் அலெக்சாந்தரின் வாரிசான முதலாம் தாலமி சோத்தர் என்பவரால் உருவாக்கப்பட்டது.[2] பெரும்பாலான புத்தகங்கள் பாபிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தன. இங்கிருந்த நூல்களின் தோராய எண்ணிக்கையானது 40,000 முதல் 400,000 வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாயின. அதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. அதன் அழிவுக்கு பொறுப்பு யார், அது எப்போது ஏற்பட்டது என்பதற்கான தகவல்கள் வேறுபடுகின்றன; உண்மையில் நூலகம் பல ஆண்டுகளில் பல தீச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அலெக்சாந்திரியா நூலகத்தின் பகுதியளவு அல்லது முழுமையான அழிவுக்கான சாத்தியமான சந்தர்ப்பமாக கி.மு. 48 இல் ஜூலியஸ் சீசரின் இராணுவத்தால் மற்றும் கி.பி 270 இல் ஆரேலியனின் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம்
பிரதான நூலகம் அழிக்கப்பட்ட பிறகு, நகரத்தின் மற்றொரு பகுதியில் செராபௌம் என்றழைக்கப்பட்ட கோவிலில் அறிஞர்கள் "மாற்று நூலகத்தை" பயன்படுத்தினர். எகிப்தை முஸ்லீம்கள் வெற்றி கொண்ட காலமான கி.பி. 642 இல் (அல்லது அதற்குப் பிறகு) நூலகம் இறுதியாக அழிக்கப்பட்டிருக்கலாம்.