அலெக்சிஸ் காரெல்

அலெக்சிஸ் காரெல் (Alexis Carrel; சூன் 28, 1873 - நவம்பர் 5, 1944) பிரான்சு நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் உயிரியலாளர் ஆவார்[1]. இவர் 1912 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. இவர், குருதிக்குழல்/இரத்தநாள இணைவில் புதிய உத்திகளை உருவாக்கினார். ஒட்டறுவையியல் மற்றும் மார்பக அறுவை சிகிச்சையில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இருந்தபோதிலும், இவர் நாசிகளுடன் இணைந்து நல்லினவிருத்தியியல் கொள்கைகளை செயற்படுத்துவதில் துணை சென்றவர் என குற்றம் சாட்டப்பெற்றவர்.

அலெக்சிஸ் காரெல்
Alexis Carrel 02.jpg
பிறப்புசூன் 28, 1873 (1873-06-28) (அகவை 148)
பிரான்சு
இறப்புநவம்பர் 5, 1944(1944-11-05) (அகவை 71)
குடியுரிமைபிரான்சு
துறைஒட்டறுவையியல்
மார்பக அறுவை சிகிச்சை
பணியிடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம்
ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகுருதிக் குழல்/இரத்தநாள இணைவில் புதிய உத்திகள்; ஒட்டறுவையியல்; மார்பக அறுவை சிகிச்சை
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1912)

மேற்கோள்கள்தொகு

  1. ""Alexis Carrel - Biographical"". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015.). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Alexis Carrel - Facts"". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சிஸ்_காரெல்&oldid=2225605" இருந்து மீள்விக்கப்பட்டது