அலெக்ஸ்சாண்ட்ரா ஒலயா - கேஸ்ட்ரோ
அலெக்ஸ்சாண்ட்ரா ஓலயா- கேஸ்ட்ரோ (Alexandra Olaya- Castro) என்பவர் கொலம்பியாவின் கோட்பாட்டு இயற்பியலா் ஆவார். தற்போது இவர் லண்டன் பல்கழைக்கழகத்தில் இணை பேராசிாியராக, இயற்பியல் மற்றும் வானியல் துறையில் பணியாற்றி வருகிறாா். இவா் உயிா்மமூலக்கூறில் பகவு இயற்பியலுக்காக அறியப்பட்டாா், அதிலும் ஒளிச்சோ்க்கையில் பகவு இயற்பியல் விளைவு ஆராய்ச்சியில் தனித்துவம் வாய்ந்தவா்.[1] உயிா்மமூலக்கூறில் பகவு இயற்பியல் விளைவு கோட்பாட்டில் அவருடைய பணிக்காக, அவருக்கு 2016 ஆம் ஆண்டின் மேக்ஸ் மெடல் விருது அளிக்கப்பட்டது.[2]