அலைகளின் குறுக்கீடு

அலைகளின் குறுக்கீடு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலைகள் குறுக்கீடு செய்து அல்லது இணைந்து ஒரு புதிய அலையைத் தோற்றுவது ஆகும். ஒரே அலைநீளம் உள்ள அலைகள் குறுக்கீடு செய்தால், விளைவு வீச்சு, குறுக்கிடும் அலைகளின் வீச்சுக்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் ஆகும்.[1] சம அலைநீளமும் ஒத்த கட்டம் அல்லது ஒரே கட்ட வேறுபாடுகள் கொண்ட இரு அலைகளை வெளிப்படுத்தும் ஒளி மூலங்கள் ஓரியல் மூலங்கள் எனப்படும்.

இரண்டு ஓரியல் அலைகள் ஒரே ஊடகத்தில் செல்லும் போது பல்வேறு புள்ளிகளில் மேற்பொருந்தும் போது ஒரு அலையின் முகடும்-முகடும் சந்தித்துக் கொண்டாலோ அல்லது அகடும்-அகடும் சந்தித்துக் கொண்டாலோ அங்கு இடப்பெயர்ச்சி பெருமமாக இருக்கும். எனவே அப்புள்ளிகள் பொலிவுடன் தோன்றும். இவ்வகை குறுக்கீட்டு விளைவு ஆக்க குறுக்கீட்டு விளைவு எனப்படும்.

இரண்டு ஓரியல் அலைகள் ஒரே ஊடகத்தில் செல்லும் போது பல்வேறு புள்ளிகளில் மேற்பொருந்தும் போது ஒரு அலையின் முகடும் மற்றொரு அலையின் அகடும் சந்தித்துக் கொண்டால் அங்கு இடப்பெயர்ச்சி சுழியாக இருக்கும். எனவே அப்புள்ளிகள் கருமையாக தோன்றும். இவ்வகை குறுக்கீட்டு விளைவு அழிவு குறுக்கீட்டு விளைவு எனப்படும்.

இவ்வாறு இரண்டு ஓரியல் அலைகள் ஒன்றோடு ஒன்று மேற்பொருந்தும் போது ஒளியின் செறிவு பொருமம் மற்றும் சிறுமம் என மாறி மாறி தோன்றும். இவ்வாறு ஒளியின் செறிவில் ஏற்படும் பகிர்வு குறுக்கீட்டு விளைவு என அழைக்கப்படுகிறது.

குறுக்கீட்டு விளைவு காலத்தைப் பொறுத்து மாறாமல் அமைவதற்கு கீழ்கண்ட நிபந்தனைகள் இருக்க வேண்டும் 1. இரு மூலங்களும் ஓரியல் மூலங்களாக இருக்க வேண்டும். 2. இரு மூலங்களும் மிகக் குறுகலாக அமைய வேண்டும் 3. தனித்தனியான அகலமான பட்டைகள் பெறுவதற்கு இரு மூலங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமையவேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. அறிவியல் களஞ்சியம் - தொகு 2 - பக்கம் 343
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைகளின்_குறுக்கீடு&oldid=2747305" இலிருந்து மீள்விக்கப்பட்டது