முதன்மை பட்டியைத் திறக்கவும்
அலைநீளத்தை விளக்கும் வரிப்படம்.

இயற்பியலில், அலைநீளம் என்பது ஓர் அலையின் இரு மீளும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலைநீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலைநீளமாக கொள்ளப்படும்.

அலைநீளமானது பொதுவாக கிரேக்க மொழியின் எழுத்தான லெம்டாவினால் (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் அதிர்வெண்ணுக்கு நேர்மாறவிகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைகள், குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.[1]

அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும்.

சைன் வடிவ அலையின் அலைநீளம்தொகு

மாறாத வேகம் v ஐக் கொண்டு நகருமொரு சைன் வடிவ அலையின் அலைநீளம் λ ஐக் கணித்துக் கொள்ள பின்வரும் சமன்பாடு பாவிக்கப்படும்.[2]

 

இங்கு v எனப்படுவது, குறித்த அலையின் அலைவு காலத்தில் அதன் வேகமாகும். அத்தோடு, f ஆனது, அலையின் அதிர்வெண்ணைக் குறித்து நிற்கும்.

உசாத்துணைகள்தொகு

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைநீளம்&oldid=2229400" இருந்து மீள்விக்கப்பட்டது