அல்கினைட்டு

அல்கினைட்டு (Alginite) என்பது படிக உருவமற்ற கரிமப் பொருட்களுடன் சேர்ந்து காணப்படும் ஒரு வகையான கெரோகெனின் பகுதிக்கூறு ஆகும். கரிம வேதிப்பொருள் சுவர்களாலான நுண்தொல்லுயிர் எச்சங்கள் அல்கினைட்டுடன் கலந்துள்ளன. இவை சிலிக்கா போன்ற கனிம சுவர் நுண்தொல்லுயிர் எச்சங்களில் இருந்து மாறுபடுகின்றன [1]. அல்கினைட்டு என்பது ஆல்கா அடிப்படையிலான உயிரியக்க புதை படிமத்தின் சிக்கலான மண் கலவையாகும், களிமண்ணாக மாறிய எரிமலை சாம்பல் மற்றும் கால்சியம் கார்பனேட்டு ஆகியவற்றால் இக்கனிமம் ஆகியுள்ளது. கடந்த காலத்தில் மண் கடுமையாக சீரழிந்த பிரதேசங்களில் நிலங்கள் வளம் மிக்க மண்ணாக மீண்டும் மாறுவதற்கு உதவும் கனிமங்கள் நூண்ணிய மற்றும் பெரிய உயினங்களின் ஒரு முழுமையான தொகுதியாக நிறமாலை இது உள்ளது. குறைந்தபட்சம் இரண்டு வகையான அல்கினைட்டுகளையாவது வேறுபடுத்திக் காட்ட இயலும். டெலால்கினைட்டு எனப்படும் அல்கினைட்டு ஏ, லெமால்கினைட்டு எனப்படும் அல்கினைட்டு பி என்பவை அவையிரண்டாகும் [1]. ஏ வகை அல்கினைட்டுகளில் உருவத்தால் வேறுபடக்கூடிய நுண்படிமங்களும், பி வகையில் படிக வடிவமற்ற மற்றும் படலம் போன்ற தொல்லுயிர் படிமங்களும் சேர்ந்துள்ளன.

அல்கினைட்டு

மேற்கோள்கள் =

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கினைட்டு&oldid=4133889" இலிருந்து மீள்விக்கப்பட்டது