அல்தாப் அகமது வானி
அல்தாப் அகமது வானி (Altaf Ahmad Wani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அல்தாப் குலூ என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். சம்மு காசுமீர் மாநிலத்தின் பகல்காம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் சம்மு மற்றும் காசுமீர் சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளார்.
அல்தாப் குலூ Altaf Kaloo | |
---|---|
அல்தாப் அகமது வானி | |
பகல்காம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2014–2018 | |
சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
குலாம் ரசூல் வானியின் ஒரே மகனான அல்தாப் பொறியாளராக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறினார். கல்வி வளர்ச்சிக்கான உள்ளுணர்வைக் கொண்ட ஒரு தொழிலதிபராக மக்களால் அறியப்பட்டார். தெற்கு காசுமீரின் அனந்த்நாக்கில் தில்லி பொதுப் பள்ளி என்ற பெயரில் ஒரு தனியார் பள்ளியைத் திறந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டில் அரசியல் வாழ்க்கையையும் தொடங்கினார். இதே ஆண்டில் சம்மு & காசுமீர் தேசிய மாநாட்டு சார்பாக தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் சட்ட மேலவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.
1972 ஆம் ஆண்டில் இசுலாமாபாத்தின் ஐசுமுகாம் பகுதியில் ஓர் உயர் நடுத்தர வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர், குறுகிய காலத்தில் சம்மு காசுமீர் தேசிய கட்சிக்குள் பிரபலமானார். அல்தாப் அகமது வானி கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் நல்ல புத்தகங்களில் இருப்பதாகவும், கட்சியில் பல தசாப்தங்களாக பதவியில் இருக்கும் மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இல்லாத ஆதரவை இவர் அனுபவிப்பதாகவும் காங்கிரசு கட்சி வட்டாரங்கள் கூறுகையில் தெரிவித்தனர்.[1] 2014 ஆம் ஆண்டில் சம்மு மற்றும் காசுமீர் சட்டப் பேரவைத் தொகுதியான பகல்காம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A Star Fall ". Kashmir Life. 23 September 2012. பார்க்கப்பட்ட நாள் 6 December 2016.
- ↑ "Altaf Ahmad Wani Won". NDTV Elections. http://www.ndtv.com/elections/assembly-mlas/jk-pahalgam-election-results-2014.
- ↑ "Pahalgam to witness triangular contest". NYOOOZ. 13 December 2014 இம் மூலத்தில் இருந்து 21 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161221101828/http://www.nyoooz.com/kashmir/26116/pahalgam-to-witness-triangular-contest. பார்த்த நாள்: 6 December 2016.
- ↑ "Altaf Ahmad Wani". Association for Democratic Reforms.