அல்துபைட்டு
யுரேனைல் பாசுப்பேட்டுக் கனிமம்
அல்துபைட்டு (Althupite) என்பது AlTh(UO2)7(PO4)4O2(OH)5·15H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அரியவகை அலுமினியம் தோரியம் யுரேனைல் பாசுப்பேட்டுக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. பெக்மாடைட்டு என்ற தீப்பாறை வகையிலிருந்து இக்கனிமம் கிடைக்கிறது. அலுமினியம், தோரியம், யுரேனியம் மற்றும் பாசுப்பரசு ஆகிய தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களிலிருந்து அல்துபைட்டு என்ற பெயர் பெறப்பட்டுள்ளது[1][2][3]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் அல்துபைட்டு கனிமத்தை App என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
அல்துபைட்டு Althupite | |
---|---|
உலகளவில் அறியப்பட்ட மிகவும் அரிதான Th-U கனிமமான அல்துபைட்டின் மஞ்சள் படிகங்கள். பெல்ச்சியத்தின் அருங்காட்சியக சேகரிப்பு. | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | AlTh(UO2)7(PO4)4O2(OH)5·15H2O |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் |
விகுவுத் தன்மை | நெகிழ்வுத்தன்மை கொண்டது |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5-4 |
மிளிர்வு | பளபளக்கும், துணை பளபளப்பு |
கீற்றுவண்ணம் | மஞ்சள் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 3.91 |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Piret P. and Deliens M. 1987: Les phosphates d'uranyle et d'aluminium de Kobokobo. IX. L'althupite AlTh(UO2)[(UO2)3O(OH)(PO4)2]2(OH)3•15H2O, nouveau minéral; propriétés et structure cristalline. Bulletin de Mineralogie, 110, 65-72
- ↑ http://www.mindat.org/min-149.html Mindat
- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/althupite.pdf Handbook of Mineralogy