அல்தைசிட்டு

கார தைட்டானியம் அலுமினோசிலிக்கேட்டு குளோரைடு கனிமம்

அல்தைசிட்டு (Altisite) என்பது Na3K6Ti2Al2Si8O26Cl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். கார தைட்டானியம் அலுமினோசிலிக்கேட்டு குளோரைடு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிலத்தடியில் உருவாகும் காரத்தன்மை கொண்ட அக்னிப்பாறைகளிலிருந்து இது கிடைக்கிறது. அலுமினியம், தைட்டானியம், சிலிக்கன் என்ற தனிமங்கள் கனிமத்தில் சேர்ந்திருப்பதால் அலுமினியத்திலிருந்து ’அல்’, தைட்டானியத்திலிருந்து ’தை’, சிலிக்கனிலிருந்து ‘சி’ எழுத்துக்கள் எடுக்கப்பட்டு அல்தைசிட்டு என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது [1][2][3].

அல்தைசிட்டு
Altisite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுNa3K6Ti2Al2Si8O26Cl3
இனங்காணல்
நிறம்நிறமற்றது
பிளப்புஏதுமில்லை
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை6
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒப்படர்த்தி2.64

C2/m என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் அல்தைசிட்டு படிகமாகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Ferraris G., Khomyakov A. P.,and Ivaldi G. 1995: Altisite Na3K6Ti2[Al2Si8O26]Cl3 a new hyperalkaline aluminosilicate from Kola Peninsula (Russia) related to lemoynite: Crystal structure and thermal evolution. Eur. J. Mineral., 7, 537-546 in Jambor J. L., Pertsev N. N. i Roberts A. C. 1996: New mineral names. Am. Min., 81, 516-520, [1]
  2. http://www.mindat.org/min-150.html Mindat
  3. http://webmineral.com/data/Altisite.shtml Webmineral
  4. Ferraris G., Khomyakov A. P.,and Ivaldi G. 1995: Altisite Na3K6Ti2[Al2Si8O26]Cl3 a new hyperalkaline aluminosilicate from Kola Peninsula (Russia) related to lemoynite: Crystal structure and thermal evolution. Eur. J. Mineral., 7, 537–546 in Jambor J. L., Pertsev N. N. i Roberts A. C. 1996: New mineral names. Am. Min., 81, 516-520, [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்தைசிட்டு&oldid=3937221" இலிருந்து மீள்விக்கப்பட்டது