அல்பெரென் துய்மாசு
அல்பெரென் துய்மாசு (Alperen Duymaz) (பிறப்பு: 3 நவம்பர் 1992)[1] என்பவர் துருக்கிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு 'ஏசி ஆக்' என்ற தொடர் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து டட்லே கோக் யலஞ்சலர் (2015-2016), போட்ரம் மசாலி (2016-2017),[2][3][4] சுகூர் (2018),[5] ஜெம்ஹேரி (2020), சொன் யாஸ் (2021)[6] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் துருக்கியில் அறியப்படும் நடிகர் ஆனார். இவர் 2018 ஆம் ஆண்டு 'திரேனிச் கரடே' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[7]
அல்பெரென் துய்மாசு | |
---|---|
பிறப்பு | 3 நவம்பர் 1992 அங்காரா, துருக்கி |
பணி | நடிகர், வடிவழகர் |
செயற்பாட்டுக் காலம் | 2015–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | குப்ரா கெல்கிட் (தி. 2020) |
வாழ்க்கை
தொகுதுய்மாசு 3 நவம்பர் 1992 ஆம் ஆண்டில் துருக்கியில் உள்ள அங்காராவில் பிறந்தார். தனது உயர்நிலைப் பள்ளி ஆண்டுகளில் இசை மற்றும் வடிவழகர் துறையில் ஆர்வம் காட்டினார்.[8] அதை தொடர்ந்து அங்காரா மாநிலத்தில் உள்ள ஹசெட்டெப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். 2020 ஆம் ஆண்டு 'குப்ரா கெல்கிட்' என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ALPEREN DUYMAZ". Cem Tatlıtuğ Management. Archived from the original on 1 May 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Alperen Duymaz kimdir?". Vatan. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Oyunculuğun özgür kıldığı adam: Alperen Duymaz". ranini.tv. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Alperen Duymaz: İlgi beni utandırıyor". Hürriyet Daily News. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Çukur'da bomba transfer! Alperen Duymaz Çukur dizisinde". Posta. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Alperen Duymaz'dan zor sahne!". Habertürk. 17 January 2020. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.
- ↑ "Direniş Karatay ekibi filmi anlattı". NTV. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ "Alperen Duymaz: Oyunculuk büyük bir özgürlük". Haber Türk. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
- ↑ Bayrak, İsmail (22 January 2020). "Alperen Duymaz, öğretmen sevgilisi Kübra Kelkit ile gizlice evlendi". Hürriyet. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.