அல்மா ஆட்டா பிரகடனம்
அல்மா ஆட்டா பிரகடனம் (Declaration of Alma-Ata) என்பது ஆரம்ப சுகாதார கவனிப்பு அல்லது முதல்நிலை சுகாதார கவனிப்பை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனைத்துலகப் பிரகடனம் ஆகும். 1978 ஆம் ஆண்டில் கசகஸ்தானில் அல்மா ஆட்டா எனும் இடத்தில் நடந்த மாநாட்டில் இப்பிரகடனம் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]
பகுதிக் கூறுகள்
தொகுஇப்பிரகடனத்தில் பத்து பாகங்கள் உள்ளன. அவை,
- நலம் என்பதன் வரையறை[2]
- உலகநாடுகளுக்கிடையே இருக்கும் சமமற்ற தன்மை
- நாடுகள் பொருளாதர ரீதியில் முன்னேற நலமான மக்கள் அவசியம்
- நலச்சேவைகளைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதலில் மக்களுக்கு உள்ள உரிமை
- எல்லாக் குடிமக்களுக்கும் நலச்சேவை வழங்க வேண்டிய நாடுகளின் கடமை
- முதல்நிலை நலச்சேவையின் முக்கியத்துவத்தை மறுஉறுதி செய்தல்
- ஆரம்ப சுகாதார சேவையின் பாகங்கள்[3]
- தேசிய கொள்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆரம்ப சுகாதாரத்திற்கான அரசியல் விருப்பத்தை அடைதல்
- நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு
- 2000 ஆவது ஆண்டில் அனைவரும் நலமுடன் இருத்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ WHO. Declaration from the website of the World Health Organization.
- ↑ WHO. Definition of health from WHO Constitution. The same is reaffirmed by the Alma Ata Declaration World Health Organization; 2006
- ↑ Keynote address of Dr. Margaret Chan at the International Seminar on Primary Health Care in Rural China in November 2007