அல்லாபோக்தனைட்டு
பாசுபைடு கனிமம்
அல்லாபோக்தனைட்டு (Allabogdanite) ஓர் அரிய பாசுபைடு கனிமம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (Fe,Ni)2P ஆகும். இக்கனிமம்1997 ஆம் ஆண்டு விண்வீழ் கற்களில் காணப்பட்டது [3][1]. உருசியாவின் சகா குடியரசின் யாகுட்டியாவிலுள்ள ஒனெல்லோ ஆற்று வடிநிலத்தில் காணப்பட்ட ஒனெல்லோ விண்விழ் கல்லில் அல்லாபோக்தனைட்டு கனிமம் காணப்பட்டது. இதனுடன் இரும்பு மற்றும் நிக்கல் தனிமங்களின் கனிமங்களான தேனைட்டு, சிக்ரெய்பெர்சைட்டு, காமாசைட்டு, கிராபைட்டு, அவாருயைட்டு போன்ற கனிமங்கள் கலந்து காணப்பட்டன.
அல்லாபோக்தனைட்டு Allabogdanite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுபைடு கனிமம் |
வேதி வாய்பாடு | (Fe,Ni)2P |
இனங்காணல் | |
நிறம் | மெல்லிய மஞ்சள் |
படிக இயல்பு | நுண் படிமுறை வளர்ச்சி |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 5-6 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.11 |
மேற்கோள்கள் | [1][2] |
உருசிய நிலவியாலாளர் அல்லாபோக்தனோவாவின் நினைவாக கனிமத்திற்கு அல்லாபோக்தனைட்டு என்று பெயரிடப்பட்டது[2].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அல்லாபோக்தனைட்டு கனிமத்தை Abg[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mindat
- ↑ 2.0 2.1 Webmineral data
- ↑ Britvin S. N., Rudashevsky N. S., Krivovichev S. V., Burns P. C. and Polekhovsky Y. S. 2002: Allabogdanite, (Fe,Ni)2P, a new mineral from the Onello meteorite: The occurrence and crystal structure. American Mineralogist, 87(8-9), 1245-1249 - [1]
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.