அல்லி உதயன்
உதயக்குமார் என்ற இயற்பெயர் கொண்ட அல்லி உதயன் ஒரு சிறுகதை எழுத்தாளர், கவிஞர். தேனி - அல்லிநகரத்தில் வசித்து வரும் இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை என்று பல சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறார். உண்ணாமலை பதிப்பகம் எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி, தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளுடன் இணைந்து பல கூட்டுக் கவிதை, சிறுகதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். அல்லி உதயன் எண்பதுகளில் எழுதத்துவங்கிய முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- கறை படிந்த வைகறைகள் (கவிதைகள்)
- பிழிவு (சிறுகதைகள்)
- அல்லிஉதயன் கதைகள்
- வழிப்போக்கு (சிறுகதைகள்)
- சுப்பாரெட்டியாரின் பூர்வீகம்
- அரண்
ஈடுபாடுள்ள இலக்கிய அமைப்பு
தொகுதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர். தேனி மாவட்டத்தின் முன்னாள் தலைவராகவும், செயலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.
வெளி இணைப்பு
தொகு- [http://theniwriters.blogspot.in/2011/08/blog-post_6057.html தேனி மாவட்ட எழுத்தாளர்கள் வலைப்பூவில் அல்லி உதயன் பற்றிய குறிப்புகள்.
- [http://www.dinamani.com/edition_madurai/theni/2015/11/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/article3145082.ece அல்லி உதயன் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழா பற்றிய பத்திரிகைச் செய்தி