அல்-ஜினா வான் தாக்குதல் 2017

ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 16 மார்ச் 2017 அன்று சிரியா நாட்டின் அலெப்போ நகரருகில் தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தின் மீது வான் தாக்குதல் நடத்தியது[1]. இத்தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்கள் அல் காயிதா அமைப்பினைச் சார்ந்தவர்கள் என ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் கூறியது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் மசூதியில் தொழுகைக்காக கூடியிருந்தவர்கள் என உள்ளூர் மக்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஆகியோர் கூறினர்[2]. இதை மறுத்த ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடம் மசூதி அல்ல என்றும் மசூதிக்கு அடுத்து இருந்தக் கட்டிடம் என உறுதிப்படுத்தியது. மசூதியில் தாக்குதல் நடத்தியபோது 300 பேர் குழுமியிருந்தர் என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ராமி அப்துல் ரெஹ்மான் (Rami Abdel Rahman) தெரிவித்தார்.[3][4]

மேற்கோள்கள் தொகு