அல் ஜசீரா ஆங்கிலம்
அல் ஜசீரா ஆங்கிலம் (AJE; அரபு மொழி: الجزيرة, romanized: al-jazīrah, பலுக்கல் [æl (d)ʒæˈziːrɐ], மூவலந்தீவு எனப் பொருள்படுவது) 24 மணிநேர ஆங்கில மொழி செய்தித் தொலைக்காட்சி ஆகும். கத்தார் நாடு மூவலந்தீவு என்பதால், இத்தொலைக்காட்சிக்கு அல் ஜசீரா எனப் பெயரிடப்பட்டது. அல் ஜசீரா மீடியா நெட்வொர்க் நிறுவனத்திற்குச் சொந்தமான அல் ஜசீரா ஆங்கிலத் தொலைக்காட்சியானது பன்னாட்டு செய்தித் தொலைக்காட்சியாக இயங்குகிறது. மேற்கு ஆசியாவில் தலைமையகத்தைக் கொண்டு தொடங்கப்பட்ட முதலாவது ஆங்கில மொழி தொலைக்காட்சியாகும்.[3]
அல் ஜசீரா ஆங்கிலம் | |
---|---|
வலையமைப்பு | அல் ஜசீரா மீடியா நெட்வொர்க்[1][2] |
நாடு | கத்தார் |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | தோகா, கத்தார் |
40 மில்லியன் வீடுகளைச் சென்றடைய வேண்டும் எனும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலைவரிசை, 80 மில்லியன் வீடுகளைச் சென்றடைந்தது.[4] 2009 ஆம் ஆண்டில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாழும் நேயர்களால் இந்த அலைவரிசையை காண இயன்றது. வாசிங்டனில் இந்த அலைவரிசையின் அலுவல்முறை தகவல்தொடர்பாளராக பணியாற்றிய ஒருவர் தெரிவித்ததன்படி, 100 நாடுகளிலுள்ள சுமார் 130 மில்லியன் வீடுகளை இந்த அலைவரிசை சென்றடைந்திருந்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Habib Toumi (13 July 2011). "Al Jazeera turning into private media organisation". Gulf News இம் மூலத்தில் இருந்து 12 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210712201902/https://gulfnews.com/world/gulf/qatar/al-jazeera-turning-into-private-media-organisation-1.837871.
- ↑ Bridges, Scott (2012-10-19). "How Al Jazeera took on the (English-speaking) world" இம் மூலத்தில் இருந்து 24 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210124172453/https://insidestory.org.au/how-al-jazeera-took-on-the-english-speaking-world/.
- ↑ "Al-Jazeera Says Its English-Language News Channel Will Launch November 15". The Post-Star. 1 November 2006 இம் மூலத்தில் இருந்து 7 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091007231253/http://www.poststar.com/articles/2006/11/01/news/doc4548aba7b0902764236839.txt.
- ↑ "Al-Jazeera English hits airwaves". BBC News. 15 November 2006 இம் மூலத்தில் இருந்து 6 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070306205729/http://news.bbc.co.uk/2/hi/middle_east/6149310.stm.
- ↑ Cohen, Noam (1 January 2009). "Al Jazeera provides an inside look at Gaza conflict". The New York Times இம் மூலத்தில் இருந்து 22 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160722054636/http://www.nytimes.com/2009/01/11/technology/11iht-jazeera.4.19256575.html?_r=1.
வெளியிணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Official Al Jazeera
- Al Jazeera English channel on YouTube
- டுவிட்டரில் அல் ஜசீரா ஆங்கிலம்
- Al Jazeera English on satellite broadcast around the world
- யூடியூபில் Al Jazeera English Pre-Launch Promo (2006)
- "Media Blackout in Egypt and the U.S.: Al Jazeera Forced Off the Air by Mubarak, Telecommunications Companies Block Its Expansion in the United States". Democracy Now. 1 February 2011. http://www.democracynow.org/2011/2/1/media_blackout_in_egypt_and_the.