அல் நசிரியா

ஈராக்கில் உள்ள ஒரு நகரம்

நசிரியா அல்லது அல் நசிரியா (Nasiriyah, அரபு மொழி: الناصرية‎; BGN: An Nāşirīyah; also spelled Nassiriya or Nasiriya) என்பது ஈராக்கின் நகரங்களில் ஒன்றாகும். புறாத்து ஆற்றின் ஆற்றங்கரையில் அல் நசிரியா நகரம் அமைந்துள்ளது. இது பகுதாதிலிருந்து ஏறத்தாழ 225 மைல்கல் (370 km) தொலைவில் தென்மேற்காக அமைந்துள்ளது. உர் என்ற பண்டைய நகரத்தின் இடிபாடுகளின் அருகாமையில் அல் நசிரியா நகரம் அமைந்துள்ளது. இது டி குவார் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2003இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அல் நசிரியா நகரத்தின் மக்கள் தொகை 560,000 ஆகும். அல் நசிரியா நகரம் ஈராக்கின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[1] இந்த நகரம் முசுலிம், மண்டியான், ஜெவ் போன்ற சமய பல்வகைமை மக்கள் தொகையை 20ஆம் நூற்றாண்டில் கொண்டிருந்ததது.[2] ஆனால், தற்போதைய காலப்பகுதியில் அல் நசிரியா நகரத்தின் முதன்மையான சமயப் பிரிவாக விளங்குவது சியா இசுலாம் ஆகும்.[1]

நசிரியா
அரபு மொழி: الناصرية
An Nāṣirīyah
Nasiriyah town centre
Nasiriyah town centre
நாடு ஈராக்
மாகாணம்டி குவார்
மாவட்டம்நசிரியா
நிறுவப்பட்டது1872
மக்கள்தொகை
 (2012 (Estimate))
 • மொத்தம்8,60,200

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mockaitis, 2013, p. 291.
  2. Field Museum of Natural History, 1940, p. 258.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_நசிரியா&oldid=1996355" இலிருந்து மீள்விக்கப்பட்டது