அல் பிடா பூங்கா

அல் பிடா பூங்கா (Al Bidda Park) என்பது கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் அமைந்துள்ள பூங்காவாகும். இப்பூங்கா முன்னர் அல் ருமைலா பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. [1] கத்தார் தேசிய அரங்கிற்கு அடுத்ததாக கத்தார் தோஹாவில் உள்ள ஒரு பூங்கா. இது தோஹா விரிகுடாவுக்கு அருகில் உள்ளது, 7 கிமீ தூரமுள்ள தோஹா கார்னிச்சை நடைபாதை அருகில் அமைந்துள்ள தோஹாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகவும் இப்பூங்கா திகழ்கிறது. [2] பறவைக் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. [3] இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு மைதானம், சிறிய கடைகள் மற்றும் கலாச்சார பாரம்பரிய மையமான கலாச்சார கிராமம் ஆகியவை அடங்கியுள்ளன.

அல் பிடா பூங்கா
Al Bida Park, Westbay Doha, Qatar - panoramio.jpg
2013 ஆம் ஆண்டு அல் பிடா பூங்கா
வகைபொதுப்பூங்கா
அமைவிடம்தோகா, கத்தார்
ஆள்கூறு25°18′00″N 51°31′04″E / 25.30°N 51.517777°E / 25.30; 51.517777ஆள்கூறுகள்: 25°18′00″N 51°31′04″E / 25.30°N 51.517777°E / 25.30; 51.517777
பரப்பு200 ஏக்கர்கள் (81 ha)
உருவாக்கப்பட்டது2018 (2018)
நிலைவருடம் முழுவதும்

நவம்பர் 2014 இல் புதுப்பிப்பதற்காக மூடப்பட்ட பின்னர், [2] தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இந்த பூங்கா பிப்ரவரி 2018 இல் மீண்டும் திறக்கப்பட்டது. [1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_பிடா_பூங்கா&oldid=3232426" இருந்து மீள்விக்கப்பட்டது