அளவிடங்கான்
அளவிடங்கான் (Alavidangan) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி தாலுகாவில் இருக்கும் ஒரு நடுத்தர கிராமமாகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மொத்தம் 364 குடும்பங்கள் வசித்தன. கிராமத்தின் மக்கள் தொகை 1278 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் 642 ஆண்கள் மற்றும் 636 பெண்கள் இருந்தனர்.
கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 92 ஆக இருந்தது. இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 7.20% ஆகும். அளவிடங்கான் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 991 ஆக இருந்தது. இது தமிழ்நாட்டின் மாநில சராசரியான 996 என்பதை விடக் குறைவாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் குழந்தை பாலின விகிதம் 840 என்ற அளவில் தமிழக சராசரியான 943 என்பதைவிடக் குறைவாக இருந்தது.
தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது கல்வியறிவு விகிதம் 2011 ஆம் ஆண்டில் 71.25% ஆகும். இது தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதமான 80.09% என்பதைவிடக் குறைவாகும். மொத்த கல்வியறிவு பெற்றவர்களில் ஆண்களின் கல்வியறிவு 86.66% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 55.89% ஆகவும் இருந்தது.[1]
அமைவிடம்
தொகுஅளவிடங்கான் சிவகங்கையிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், இளையான்குடியிலிருந்து 14 கி.மீ.தொலைவிலும் சென்னையிலிருந்து 476 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. விசவனூர், கல்லடிதிடல், கட்டனூர், முத்தூர், ஆக்கவயல் போன்ற கிராமங்கள் அளவிடங்கானைச் சுற்றி அமைந்துள்ளன. பரமக்குடி, இராமநாதபுரம், சிவங்கை, காரைக்குடி போன்ற நகரங்கள் இதனைச் சுற்றி அமைந்துள்ளன.
முக்கிய கோவில்கள்
தொகுஅளவிடங்கான் அருகாமையில் மாடக்கோட்டை முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. அடைக்கலமாதா ஆலயம் அளவிடங்கானில் அமைந்துள்ளது.
கல்வி
தொகுஇங்கு அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும், அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதில் அளவிடங்கானைச் சுற்றி உள்ள மாணவ,மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
முக்கிய தொழில்
தொகு- மிளகாய் சாகுபடி செய்தல்
- மல்லி, எள் சாகுபடி செய்தல்
- கரிமூட்டம் போடுதல்
பேசும் மொழிகள்
தொகுஇங்கு உள்ள மக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alavidangan Village Population - Ilayangudi - Sivaganga, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.