அளவை ஆகுபெயர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அளவை ஆகுபெயர்கள் என்பன ஆகு பெயர்களில் எண்ணல் எடுத்தல், முகத்தல், நீட்டல் போன்ற அளவைப் பெயர்களை குறிக்கும் ஆகுபெயர்கள் ஆகும்.
ஆகுபெயர்
தொகுஒரு பொருளின்பெயர் தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது ஆகுபெயர் ஆகும். அதாவது, ஒரு பொருளின் பெயர் தன்னோடு தொடர்புடைய பிறிதோர் பொருளுக்குத் தொன்றுதொட்டு ஆகிவருவது ஆகுபெயர். இது பதினாறு வகைப்படும்.
பொருளாகு பெயர் இடவாகுபெயர் காலவாகுபெயர் சினையாகுபெயர் குணவாகுபெயர் தொழிலாகுபெயர்
என்பன முக்கிய அளவைஆகுபெயர்களாகும்
அளவை ஆகுபெயர்கள்
தொகுஎண்ணல் அளவை எடுத்தல் அளவை முகத்தில் அளவை நீட்டல் அளவை ஆகியன அளவை ஆகுபெயர்களாக வழங்கி வருகின்றன.
எண்ணல் அளவை ஆகுபெயர் -,"ஒன்று பெற்றால் ஒளிமயம்"
இத்தொடரில் ஒன்று எனும் எண்ணுப்பெயர், அவ்ஂவெண்ணிக்கையுடைய குழந்தைக்கும் பெயராகி வந்துள்ளது.இஃது எண்ணல் அளவை ஆகுபெயர்.
எடுத்தல் அளவை ஆகுபெயர் அரிசிக் கடைக்குச் சென்று," ஐந்து கிலோ என்ன விலை ?" கேட்பது.
தொகுஇத்தொடரில்," ஐந்து கிலோ" என்னும் அளவுப் பெயர் அவ்வளவைக் குறிக்காமல் அவ்வளவுடைய அரிசியைக் குறிக்கிறது.எனவே இது எடுத்தல் அளவை ஆகுபெயர்.
முகத்தல் அளவை ஆகுபெயர்"பால்காரரிடம் இரண்டு லிட்டர் கொடு" எனக் கேட்டால் அவ்வளவுடைய பால் தேவை என்பது பொருளாகும்
நீட்டல் அளவை ஆகுபெயர்"மூன்று மீட்டர் கொடு." இத்தொடரில் மூன்று மீட்டர் என்பது அவ்வளவுடைய அளவுக்குக் குறிக்காமல் அதனால் நீட்டி அளக்கப்பெறும் துணிக்கு ஆகி வந்தது.