அளிப்புரிமை

அளிப்புரிமை (copyleft) என்ற சொல், காப்புரிமை (copyright) என்ற சொல்லிற்கு தத்துவரீதியாக செய்யப்பட்ட மாற்றமாகும். இது காப்புரிமைச் சட்டத்தையே பயன்படுத்தி ஆக்கமொன்றின் நகல்களை விநியோகிப்பதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்படுகிறது.

அளிப்புரிமையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடு C எனும் எழுத்து இடப்புறம் திரும்பியிருப்பதை கவனிக்க.

ஆக்கமொன்றினை, அதன் நகல்களை, அவ்வாக்கத்தின் மாற்றம் செய்யப்பட்ட நகல்களை விநியோகிப்பதற்கான சுதந்திரத்தையும், அவ்வாறு விநியோகிக்கப்பட்ட நகல்களும் அதேமாதிரியான சுதந்திரத்தை கொண்டிருப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Newman, John (29 December 2011). "Copyright and Open Access at the Bedside". NEJM 365 (26): 2447–2449. doi:10.1056/NEJMp1110652. பப்மெட்:22204721. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளிப்புரிமை&oldid=4167643" இலிருந்து மீள்விக்கப்பட்டது