அள்ளன் என்பவன் அதியன் என்ற மன்னனை எதிர்த்துத் தோற்றவன்.

பல போரில் வெற்றி கண்ட அள்ளன் அதியனைத் தாக்கினான். போரில் அதியன் அள்ளனைப் பணியும்படி செய்தான். என்றாலும் அள்ளன்மீது அளியன் என்று அதியன் இரக்கம் காட்டினான். தன் வெற்றிமுரசம் மாக்கிணைப் பறையை முழக்கவேண்டாம் என்று அவித்து வைத்துவிட்டான்.[1]

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அள்ளன் அதியனின் படைத்தலைவனாக மாறியிருக்கலாம் என எண்ணப்படுகிறது.

அடிக்குறிப்பு

தொகு
  1. அளியன் என்று அருளி ... நாடுகோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை வள் உயிர் மாக்கிணை கண் அவிந்து ஆங்கு அகம் 325-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=அள்ளன்&oldid=2565840" இலிருந்து மீள்விக்கப்பட்டது