அழகர் அணை திட்டம்
அழகர் அணை திட்டம் என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வரும் அணைத் திட்டமாகும். 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரை பரிந்துரை நிலையிலேயே இத்திட்டம் இருந்தது.
காலக்கோடு
தொகு1929 - அழகர் அணைக்கான கோரிக்கை முதன்முதலாக எழுப்பப்பட்டது.[1]
1949 - மழை மறைவுப் பகுதியான அப்போதைய இராமநாதபுர வட்டார விவசாயிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் பக்தவத்சலம் சந்தித்தார். வைகை ஆற்று நீரை சுரங்கப் பாதை அமைத்து கொண்டு வருவது குறித்து விவாதித்து அழகர் அணை திட்டம் நிறைவேற்றப்படும் என அப்போது உறுதிமொழி அளிக்கப்பட்டது.[1]
1969 - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டது.
1971 - 3 பிப்ரவரி 1969 அன்று ஆய்விற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
1973 - 18 மே 1973 அன்று அணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை பொதுப் பணித் துறை இணைச் செயலாளர் யூ. அனந்தராவ் அளித்தார். இதற்குப் பிறகு 23 கோடி உரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால் தொடராமல் தடைபட்டது.
திட்ட விவரங்கள்
தொகுதமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளும், நடந்த விவாதங்களும்
தொகு2018 - 5 சூலை 2018 அன்று, அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுமாறு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.[2]
மாவட்ட மக்களின் முன்னெடுப்புகள்
தொகு2018 - 27 ஆகத்து 2018 அன்று, 'அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' எனக் கோரி 10,000 பேர் கையெழுத்திட்ட மனுவை விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்கத்தினர் அளித்தனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "அழகர் அணை திட்டம் எப்போது நிறைவேறும்...?". தினமணி. 17 சூன் 2016. http://epaper.dinamani.com/843644/Dinamani-Madurai/17062016#page/6/2. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2018.
- ↑ "அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுங்க சட்டசபையில் ஸ்ரீவி., எம்.எல்.ஏ.,வலியுறுத்தல்". தினமலர். 6 சூலை 2018. http://www.dinamalar.com/district_detail.asp?id=2055803. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2018.
- ↑ "அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: 10 ஆயிரம் கையெழுத்துடன் விவசாய சங்கத்தினர் மனு". தினத்தந்தி. 28 ஆகத்து 2018. https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/08/28010843/The-Alagar-Dam-project-should-be-fulfilled.vpf. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2018.