அழிவுக் கதிர்வீச்சு
அழிவுக் கதிர்வீச்சு (annihilation radiation) என்பது காமா நிறமாலையியலில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்து ஆகும். துகள் ஒன்றும் அதன் எதிர்த் துகள் ஒன்றும் தமக்கிடையே மோதி அழிவதால் காமாக் கதிர் உருவாகின்றது. பொதுவாக, எதிர் மின்னூட்டம் கொண்ட ஒரு இலத்திரனும், நேர் மின்னூட்டம் கொண்ட ஒரு பாசிட்ரானும் (+positron) எதிர்படும் போது அவைகள் அழிந்து 511 கிலோ eV ஆற்றலுள்ள இரு காமாக் கதிர்களைக் கொடுக்கின்றன.[1] இந்த காமாக் கதிர்கள் எதிரெதிர் திசையில் செல்கின்றன.
புளோரின்-18 பாசிட்ரானை உமிழ்கிறது. இது அழிவு கதிர் வீச்சினைத் தோற்றுவிக்கும். இக் கதிர்கள் பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படம் (Positron Emmision tomogram) பெற உதவுகிறது. PET CT துணையுடன் புற்று நோய் இடத்தினைத் துல்லியமாக தெரிந்து மருத்துவம் மேற்கொள்ள முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Charlton M and Humberston JW. Positron Physics. Cambridge University Press, 2001, p. 6.