அழுத்த அறை (pressure bomb அல்லது Scholander bomb) என்பது தாவர திசுக்களிலுள்ள நீரின் அழுத்த வேறுபாட்டை அளவிட பயன்படும் ஒரு கருவியாகும். ஒரு மூடப்பட்ட அறையில் தண்டுடன் இணைக்கப்பட்ட இலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதிக அழுத்தத்துடன் வாயு (பொதுவாக அழுத்தப்பட்ட நைட்ரசன்) உள்ளே செலுத்தப்படுகிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது தாவர இலையின் உள்ளே உள்ள நீரானது சைலத்திலிருந்து வெளியேறுகிறது. இவ்வாறு கசியும் நீர் தண்டின் முனையில் மெதுவாக வெளிவருவதைப் பார்க்கலாம்.  வெளியிலிருந்து செலுத்தப்படும் அழுத்தமும், தாவர திசுக்களிலுள்ள தண்ணீரின் அழுத்த வேறுபாடும் சமமாகவும்,  எதிராகவும் இருக்கும்.[1][2] அழுத்த அறையானது எளிதில் கையாளக்கூடியதாகவும் இயந்திரவியல்ரீதியாக எளிமையானதுமாக இருப்பதால், தாவர உடலியங்கியலில் நீர் அழுத்த அளவீடுகளுக்கு மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.[3]

அழுத்த அறையின் அமைப்பினைக் காட்டும் வரைபடம்

குறிப்புகள்

தொகு
  1. http://jxb.oxfordjournals.org/cgi/content/abstract/23/1/267 1972 Journal of Experimental Botany - The Measurement of the Turgor Pressure and the Water Relations of Plants by the Pressure-bomb Technique M. T. TYREE and H. T. HAMMEL
  2. Scholander, P.; Bradstreet, E.; Hemmingsen, E.; Hammel, H. (1965). "Sap Pressure in Vascular Plants: Negative hydrostatic pressure can be measured in plants". Science 148 (3668): 339–346. doi:10.1126/science.148.3668.339. பப்மெட்:17832103. Bibcode: 1965Sci...148..339S. 
  3. Gifftord, H.H. (18 August 1971). "SIMPLIFIED APPARATUS FOR DETERMINING LEAF WATER POTENTIALS IN PINE NEEDLES" (PDF). Scion Research.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுத்த_அறை&oldid=3522372" இலிருந்து மீள்விக்கப்பட்டது