அழுத்த சோதனைகள்

அழுத்த சோதனைகள் வெவ்வேறு அழுத்த நிலைகளில் பொருள்களின் பண்புகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை அறிய நமக்கு உதவுகிறது.சோதனைகளானது வெவ்வேறு அழுத்தங்களில் அதாவது குறைவழுத்தம் மற்றும் மிகை அழுத்தங்களில் நிகழ்த்தப்படுகிறது. உதாரணமாக நீரானது குறைவழுத்தத்தில் குறை வெப்பநிலையிலேயே அதாவது 100 0C க்கு (0Celcius) குறைவான வெப்பநிலையிலேயே கொதிக்கிறது. அழுத்தத்தை குறைக்க வெற்றிட பம்புகளும், அதிகரிக்க பிஸ்டன் - உருளை அமைப்பும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வமைப்பை பயன்படுத்தி அழுத்தத்தை 5 ஜிகா பாஸ்கல் (GPa) வரை உயர்த்த இயலும். பிஸ்டனைப் பயன்படுத்தி கன அளவைக் குறைக்க அழுத்தம் உருளையினுள் உயர்கிறது. அழுத்தத்தைக் குறைக்க இருவேறு வகையான அழுத்தக் குறைப்பானகள் பயன்படுத்தப்படுகின்றன. வைரத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அழுத்தக் குறைப்பானானது அறிவியல் சோதனைகளிலும், வணிக அளவில் உயர் அழுத்த சோதனைகளிலும் பெயன்படுத்தப்படுகிறது. இவ்வமைப்பை பயன்படுத்தி 101 ஜிகா பாஸ்கல் வரை அழுத்தத்தை உயர்த்த இயலும். தற்போது மிகையாக 560 ஜிகா பாஸ்கல் வரை உயர்த்தி பொருளின் அளவை மிகச் சிறிதளவாக 10−5 மீட்டர் (meter) வரை கொண்டுவரப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுத்த_சோதனைகள்&oldid=3768544" இலிருந்து மீள்விக்கப்பட்டது